10 ஆண்டுக்கு பிறகு ரீ ரிலீஸ்.. வசூலில் மாஸ் காட்டும் இன்டர்ஸ்டெல்லர்..எத்தனை கோடி வசூல் தெரியுமா?
சென்னை: கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய 'இன்டர்ஸ்டெல்லர்' திரைப்படம் 2014 ஆம் ஆண்டு வெளியான ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படமாகும். இத்திரைப்படம் பத்து ஆண்டுக்கு பிறகு இந்தியாவில் ரீரிலீஸ் ஆகி வசூலில் மாஸ் காட்டி உள்ளது. ரீ ரிலீஸான ஒரு திரைப்படத்திற்கான பலரும் டிக்கெட் கிடைக்காமல் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்தாண்டு ஓப்பன்ஹைமர்' படம் வெளியாகி சக்கைப்போடு போட்டது. அணுகுண்டின் தந்தை என்றழைக்கப்படும் ராபர்ட் ஓப்பன்ஹைமரின் வாழ்க்கையை மையப்படுத்தி இத்திரைப்படத்தை உருவாக்கி இருந்தார்.இந்த திரைப்படத்தை தொடர்ந்து நோலன் அடுத்ததாக, The Odyssey' புராண திரைப்படமாக ஐமேக்ஸ் ஃபிலிம் தொழில்நுட்பத்துடன் கவிஞர் ஹோமரின் கதை ஐமேக்ஸ் திரைகளில் முதல் முறையாக வரவிருக்கிறது. இப்படத்தின் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படம் 2026-ம் ஆண்டு ஜூலை 17-ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது.

இன்டர்ஸ்டெல்லர் ரீ ரிலீஸ்: இந்நிலையில், இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் பத்து ஆண்டுகளுக்கு முன் இயக்கிய திரைப்படம் இன்டர்ஸ்டெல்லர். அப்படத்தில், மேத்யூவ் மெக்கானாகே, அன்னி ஹாத்வே, ஜெஸிகா சாஸ்டைன், பில் இர்வின் உட்பட பலர் நடித்திருந்தனர். இப்படம் 2014ம் ஆண்டு வெளியாகி உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்று, உலகளவில் $700 மில்லியனுக்கு மேல் வசூலை அள்ளியது. இத்திரைப்படம் இந்தியாவில் பிப்ரவரி 7ந் தேதி ரீ ரிலீஸ் ஆகி, மூன்று நாட்களிலேயே ரூ.7 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளது. இந்தியாவில் ஒரு ஆங்கிலப் படத்திற்கு அதுவும் ரீ ரிலீஸான படத்திற்கு இவ்வளவு பெரிய வசூலை பெற்றது இதுவே முதன் முறை. ரசிகர்களிடம் மீண்டும் வரவேற்பை பெற்று இருக்கும் இப்படத்திற்கு, டிக்கெட் கிடைக்காமல் பலரும் தவித்து வருகின்றனர். இதனால் இனி வரும் நாட்களில் இன்டர்ஸ்டெல்லர் திரைப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
வசூலில் மாஸ்: இன்டர்ஸ்டெல்லர் திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி உலகம் முழுவதும் ரீ ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், அந்த நேரத்தில் இந்தியாவில் அனைவரும் எதிர்பார்த்த திரைப்படமான 'புஷ்பா 2' வெளியான காரணமாக ஐமாக்ஸ் உட்பட போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் படம் ரீ ரிலீஸ் ஆகவில்லை. இதையடுத்து இன்டர்ஸ்டெல்லர் 7ந் தேதி வெளியானது. அதே போல இந்தியில், 2016 ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற சனம் தெரி கசம் என் இந்தி திரைப்படமும் வெள்ளிக்கிழமை ரீ ரிலீஸாகி மூன்று நாட்களில் ரூ 4.5 கோடியை வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











