ஜான்வி கபூர் படத்தில் பிரபல ஹாலிவுட் இயக்குநர்.. மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு இவர்தான் காட்பாதர்

சென்னை: மசான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகம் ஆனவர் நீரஜ் கைவான். இவர் இயக்கிய முதல் படமே இந்திய அளவில் கவனத்தை ஈர்த்தது. எதார்த்த வாழ்வியலை அடக்கமாக கொண்டு வெளியான இப்படம் உலக அரங்கில் பாராட்டையும் பெற்றது. பல விருதுகளையும் வாரி குவித்தது. இதன் மூலம் இந்திய அளவில் பிரபலம் அடைந்த இயக்குநர் நீரஜ் கைவான் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கியிருக்கிறார். இப்படத்தின் மூலம் உலகமே வியந்து பாராட்டும் ஒருவர் இப்படத்தில் இணைந்திருப்பது தான் டிரெண்டிங் செய்தியாக மாறியிருக்கிறது.

இந்தியாவில் பிரம்மாண்ட இயக்குநர் பெயர் எடுத்தவர் இயக்குநர் ஷங்கர். இவர் இயக்கும் படங்களில் இடம்பெறும் பாடல் காட்சிகள் பிரம்மிப்பை ஏற்படுத்தும். பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தையும் தரும். அதேபோன்று ஹாலிவுட்டை வியக்க வைத்தவர் தான் பிரபல இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி. இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் உலகளவில் புகழ் பெற்றுள்ளன. குறிப்பாக தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பிடித்த ஹாலிவுட் ஹீரோக்களையும் செதுக்கிய சிற்பியும் இவர்தான். இவர் படங்களில் நடிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா என்று ஏங்கி காத்து கிடக்கின்ற இளைஞர்கள் ஏராளம் உள்ளனர்.

hollywood-director-martin-scorsese-joined-in-ndian-film-homebound

மார்ட்டின் ஸ்கார்செஸி படங்கள்: இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி, கேசினோ, The Departed, The Wolf of Wall Street, Shutter Island, கேங்ஸ் ஆஃப் நியூயார்க் உள்ளிட்ட பல பிரம்மா்ண்ட படங்களை இயக்கியுள்ளார். இவரது படங்கள் உலக அரங்கில் மிகப்பெரிய மதிப்பை பெற்றுள்ளன. சில படங்கள் சர்ச்சைகளையும் தாண்டி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. ஆஸ்கார் விருதுகளையும் தட்டி சென்றிருக்கிறார். இவரது புகைப்படங்கள் அதிகளவில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறது. இந்தியாவிலும் இவர் எடுத்த படங்களின் விவரம் தெரியாவிட்டாலும் இவரது புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருவதை பார்க்கலாம். இந்திய படங்களில் பல காட்சிகள் இவர் எடுத்த படங்களின் ரெபரன்ஸ் இல்லாமல் இருந்ததில்லை. இவர் ஹாலிவுட்டின் கடவுள் என்றும் போற்றப்படுகிறார்.

இந்தியாவில் முதல் முறையாக: ஹாலிவுட்டின் ஜாம்பவான் இயக்குநர் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி இந்தியாவில் முதல் முறையாக பாலிவுட் படங்களை தயாரிக்க கமிட் ஆகியுள்ளார். அப்படம் குறித்த தகவலும் தற்போது வெளியாகியிருக்கிறது. இதன் மூலம் இந்திய அளவில் இந்த செய்தி பேசுபொருளாக மாறியிருக்கிறது. மசான் படத்தை இயக்கிய நீரஜ் கைவான் இயக்கத்தில் உருவாகியுள்ள ஹோம்பவுண்ட் படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளராக இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி ஒப்பந்தம் செய்துள்ளார். ஹோம்பவுண்ட் திரைப்படம் அடுத்த மாதம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிட இருக்கிறது. அதற்கு முன்பாகவே இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி இறங்கியுள்ளார்.

hollywood-director-martin-scorsese-joined-in-ndian-film-homebound

ஹோம்பவுண்ட் எப்படி இருக்கிறது?: பாவிவுட் இயக்குநர் கரண் ஜோகர் இப்படத்தை தயாரிக்கிறார். இதில், ஜான்வி கபூப், இஷான் கட்டர், விஷால் ஜெத்வா ஆகியோர் நடித்துள்ளனர், மேலும் ஹோம்பவுண்ட் படம் குறித்து பேசிய ஹாலிவுட் இயக்குநர் மார்ட்டின் ஸ்கார்செஸி, 2015இல் வெளியான மசான் படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதே நீரஜூடன் இணைந்து பணியாற்ற முடிவு செய்தேன். அதனால் மெலிடா டோஸ்கன் டு பிளாண்டியர் ( Melita Toscan du Plantier ) தனது இரண்டாவது படம் குறித்த ஸ்கிரிப்டை அனுப்பும் போது அதை படிக்க ஆர்வமாக இருந்தேன். ஹோம்பவுண்ட் படத்தின் மூலம் இந்திய கலாச்சாரமும் என்னை வெகுவாக ஈர்த்தது. இதற்காக இப்படத்திற்கு உதவ தயாராக இருந்தேன். இதனால், நிர்வாக தயாரிப்பாளராக இருக்க ஒப்புக்கொண்டேன். இப்படம் இந்தியாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் மார்ட்டின் ஸ்கார்செஸி தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X