“படம்ன்னா இதுதான் படம்”: ராஜமெளலியின் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தை புகழ்ந்து தள்ளிய ஹாலிவுட் இயக்குநர்கள்

ஐதராபாத்: இந்திய திரையுலகின் முன்னணி இயக்குநராக ராஜநடை போட்டு வருகிறார் ராஜமெளலி.

'பாகுபலி' படத்திற்குப் பின்னர் உலகம் முழுவதும் இவரது படங்களுக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் காணப்படுகின்றன.

ராஜமெளலி இயக்கிய 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை, ஹாலிவுட் இயக்குநர்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

பிரமாண்ட இயக்குநர்

பிரமாண்ட இயக்குநர்

ராஜமெளலியின் படங்களுக்கு ரசிகர்களிடம் எப்போதுமே அதிக வரவேற்பு காணப்படுகின்றன. அவரது படங்கள் அனைத்துமே பிரமாண்டமாகவும், மேக்கிங்கிலும் தரமானதாக வெளியாகின்றன. 'ஸ்டூடண்ட் நம்பர் 1' இல் இருந்து தொடங்கிய அவரது திரைப்பயணம், 'மகதீரா', 'நான் ஈ' படங்கள் வழியாக 'பாகுபலி' படத்தில் உச்சம் தொட்டது.

அதுக்கும் மேல

அதுக்கும் மேல

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களும் கோடிகளை வாரிகுவிக்க, இந்திய திரையுலகமே மிரண்டுதான் போனது. அதனைத் தொடர்ந்து ராஜமெளலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் ஆகியோர் நடித்த 'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம், இன்னும் பல சாதனைகளை படைத்தது. ஆயிரம் கோடிகளுக்கும் மேல் வசூல் வேட்டையாடிய இப்படம், தற்போது ஓடிடியிலும் கலக்கி வருகிறது.

ஹாலிவுட்டை கலக்கும் ஆர்.ஆர்.ஆர்

ஹாலிவுட்டை கலக்கும் ஆர்.ஆர்.ஆர்

'ஆர்.ஆர்.ஆர்' திரைப்படம் நெட்பிளிக்ஸ், ஜீ5 ஓடிடிகளில் வெளியான பின்பு, ஹாலிவுட் ரசிகர்களையும் மிரட்டி வருகிறது. ஓடிடி தளங்களில் இதுவரை 45 மில்லியன் பார்வை நேரங்களை கடந்து சாதனைப் படைத்துள்ள 'ஆர்.ஆர்.ஆர்', தொடர்ந்து, ரசிகர்களின் விருப்பத்துக்குரிய படமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில், நெட்பிளிக்ஸ் தளம் இன்னும் இந்தியில் மட்டுமே 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை ஸ்ட்ரீமிங் செய்வதாக, இயக்குநர் ராஜமெளலி கடும் கோபத்தில் உள்ளார்.

ஹாலிவுட் இயக்குநர்களுடன் ராஜமெளலி

ஹாலிவுட் இயக்குநர்களுடன் ராஜமெளலி

'ஆர்'.ஆர்.ஆர்' படத்தின் சாதனைகள் ஒருபுறம் இருக்க, இயக்குநர் ராஜமெளலியுடன் ஹாலிவுட் இயக்குநர்களான ரூசோ சகோதரர்கள் இணையம் வழியாக கலந்துரையாடினர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரூசோ பிரதர்ஸ் இயக்கிய 'தி கிரே மேன்' திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகி அசத்தி வருகிறது. இந்தப் படத்தில் கோலிவுட் அசுரன் தனுஷும் அதகளம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தரமான படம்

தரமான படம்

இந்நிலையில், ராஜமெளலியுடன் கலந்துரையாடிய ரூசோ பிரதர்ஸ், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை ஒரேடியாக புகழ்ந்து தள்ளிவிட்டனர். ஆக்சனில் மிரட்டியுள்ள 'ஆர்.ஆர்.ஆர்', நிச்சயமாக இந்திய சினிமாவின் தரமான மேஜிக்கல் திரைப்படம் எனக் கூறியுள்ளனர். ஹாலிவுட் தரத்திலான இதுபோன்ற படங்களை இயக்கும் ராஜமெளலியிடம், நாங்களும் இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கூறி, ஷாக்கிங் கொடுத்துள்ளனர்.

டிவீட்டரில் நன்றி

டிவீட்டரில் நன்றி

இந்த உரையாடல்கள் குறித்து ட்வீட் செய்துள்ள ரூசோ பிரதர்ஸ், 'ராஜமெளலியுடன் பேசியதில் மிகவும் மகிழ்ச்சி" எனத் தெரிவித்துள்ளனர். ரூசோ பிரதர்ஸின் இந்தப் பதிவை ரீ-ட்வீட் செய்துள்ள ராஜமெளலி., "உங்களுடன் பேசியதும் எனக்கு மகிழ்ச்சியே, நானும் உங்களிடம் நிறைய கற்றுக்கொள்ள ஆசைப்படுகிறேன்" எனக் கூறியுள்ளார். இந்த டிவீட்டர் பதிவுகள் இப்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X