twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் முதல் ஜோக்கர் வரை.. இந்தியாவில் இந்த ஆண்டு கல்லாக்கட்டிய ஹாலிவுட் படங்கள்!

    |

    சென்னை: 2019ம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியாகி இந்தியா உட்பட உலக நாடுகளில் பாக்ஸ் ஆஃபிஸ் சாதனைகளை பல ஹாலிவுட் திரைப்படங்கள் நிகழ்த்தின.

    கடந்த 2009ம் ஆண்டு வெளியான அவதார் படத்தின் பாக்ஸ் ஆஃபிஸை இந்த ஆண்டு வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் தான் முறியடித்தது.

    பல படங்களை ரிலீஸ் செய்து மிரட்டி வந்த மார்வெலை ஜோக்கர் படத்தின் மூலம் ஓவர்டேக் செய்தது வார்னர் ப்ராஸ்.

    2019ம் ஆண்டு இந்தியாவில் கல்லாக் கட்டிய படங்கள் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

    தீபிகாவின் மகாபாரதத்தில் இந்த ஹீரோதான் கிருஷ்ணராமே...தீபிகாவின் மகாபாரதத்தில் இந்த ஹீரோதான் கிருஷ்ணராமே...

    ஃப்ரோஸன் 2

    ஃப்ரோஸன் 2

    ஜெனிஃபர் லீ, க்ரிஸ் பக் இயக்கத்தில் இந்த ஆண்டு வெளியான டிஸ்னியின் அனிமேஷன் திரைப்படமான ஃப்ரோஸன் 2, இந்தியாவில் மட்டும் 7.1 மில்லியன் டாலர்களை கலெக்‌ஷன் செய்துள்ளது. 2013ம் ஆண்டு வெளியான ஃப்ரோஸன் படத்தின் தொடர்ச்சியாக வெளியான இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது.

    அலாதீன்

    அலாதீன்

    வால்ட் டிஸ்னி தயாரிப்பில் வில் ஸ்மித், மெனா மசாவுத், நயோமி ஸ்காட் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவான அலாதீன் படம் இந்தியாவில் மட்டும் 9 மில்லியன் டாலர் வசூலை ஈட்டி அசத்தியது.

    ஜோக்கர்

    ஜோக்கர்

    இயக்குநர் டோட் பிலிப்ஸ் இயக்கத்தில் ஜோக்வின் பீனிக்ஸ் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான ஜோக்கர் படம் உலகளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் சாதனையை படைத்தது. விமர்சக ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள ஜோக்கர் படம் பல ஆஸ்கர் விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 11.8 மில்லியன் டாலர் வசூலை தன் வசப்படுத்தியுள்ளது.

    ஹாப்ஸ் அண்ட் ஷா

    ஹாப்ஸ் அண்ட் ஷா

    ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் படத்தின் கிளை கதையான ஹாப்ஸ் அண்ட் ஷா இந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டுவைன் ஜான்சன், ஜேசன் ஸ்டாதம் நடிப்பில் ஆக்‌ஷன் படமாக வெளியான ஹாப்ஸ் அண்ட் ஷா படம் இந்தியாவில் 13.6 மில்லியன் டாலர் வசூலை குவித்தது.

    கேப்டன் மார்வெல்

    கேப்டன் மார்வெல்

    அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு முன்பாக, கேப்டன் மார்வெலை அறிமுகப்படுத்தியாக வேண்டும் என அவசர அவசரமாக மார்வெல் வெளியிட்ட படம் தான் கேப்டன் மார்வெல். ஆன்னா பாடன், ரியான் ஃப்ளெக் இயக்கத்தில் பிரை லார்சன், சாமுவேல் எல். ஜாக்சன் நடிப்பில் வெளியான கேப்டன் மார்வெல் உலகளவில் பல ஆயிரம் கோடிகளை வசூலித்தது. இந்தியாவில் 14.4 மில்லியன் டாலர் வசூலை ஈட்டியது.

    ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்

    ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம்

    அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திற்கு பிறகு வெளியான ஸ்பைடர் மேன் ஃபார் ஃப்ரம் ஹோம் திரைப்படத்தில் அயன்மேன் இறந்த பிறகு ஸ்பைடர் மேன் எப்படி அவருக்கு வரும் பிரச்சனைகளை சமாளித்து உலகை காப்பாற்றுகிறார் என்ற கதையை இயக்குநர் ஜான் வாட்ஸ் பக்காவாக இயக்கியிருந்தார். இந்தியாவில் நல்ல வரவேற்பை பெற்ற இந்த திரைப்படம் 14.8 மில்லியன் டாலரை வசூலித்தது.

    தி லயன் கிங்

    தி லயன் கிங்

    இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியான தி லயன் கிங் படம் அதன் அட்டகாசமான மேக்கிங்கால் உலகளவில் மிகப்பெரிய பாக்ஸ் ஆஃபிஸ் சாதனையை படைத்தது. தமிழில் வெளியான இந்த படத்திற்கு அரவிந்த் சாமி, சித்தார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் குரல் கொடுத்திருந்தனர். இந்தியாவில் பல மொழிகளில் வெளியான இந்த படம் 26.3 மில்லியன் டாலர்கள் கலெக்‌ஷனை அள்ளியது.

    அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

    அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்

    மிகப்பெரிய எதிர்பார்ப்பில் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படம் உலகளவில் 25 ஆயிரம் கோடி வசூல் செய்து அவதார் மற்றும் டைட்டானிக் படங்கள் இத்தனை ஆண்டுகள் கட்டிக் காப்பாற்றி வந்த வசூல் சாதனையை முறியடித்தது. இந்தியாவில் 62.6 மில்லியன் டாலர்கள் என்ற பிரம்மாண்ட பாக்ஸ் ஆஃபிஸ் சாதனையை அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படைத்தது. தமிழில் அயன்மேனுக்கு விஜய்சேதுபதி குரல் கொடுத்தது விமர்சனத்துக்குள்ளானது.

    English summary
    Avengers Endgame to Joker so many big budget Hollywood movies done a great box office collection in Indian Box office this year.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X