Don't Miss!
- News
இரட்டை இலை முடங்கினால் என்ன நடக்கும்? எடப்பாடியின் "பிளான் பி".. ஆஹா செம துணிச்சல்.. அப்போ ஓபிஎஸ்
- Lifestyle
உடலுறவுக்கு அடிமையாக இருந்த அரசர்கள் யார் தெரியுமா? இவர் 18,000 பெண்களுடன் உடலுறவு வைச்சவராம்...!
- Sports
விராட் கோலியின் டி20 எதிர்காலம்.. வெளிப்படையாக பேசிய ராகுல் டிராவிட்.. அட இதுதான் உண்மை காரணமா??
- Automobiles
இவ்ளோ கார்களில் பாதுகாப்பு பிரச்சினையா! மாருதிக்கு அடி மேல் அடி! நம்பி வாங்கிய வாடிக்கையாளர்கள் கலக்கம்!
- Finance
சும்மா எகிறி அடிக்கும் தங்கம் விலை.. போகிற போக்கை பார்த்தால் நினைக்க மட்டும் தான் முடியும் போல?
- Technology
இப்படி செஞ்சா உங்கள் Mobile Apps யார் கண்ணுக்கும் தெரியாது.! சீக்ரெட் மெயின்டைன் செய்ய டிப்ஸ்.!
- Travel
இந்திய எல்லையில் இவ்வளவு அழகிய சுற்றுலாத் தலங்கள் இருக்கின்றனவா – இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே!
- Education
LIC ADO Recruitment 2023:எல்.ஐ.சி.,யில் 1516 பட்டதாரிகளுக்கு வாய்ப்பு...!
லிசா மேரி பிரெஸ்லி மாரடைப்பபு காரணமாக உயிரிழந்தார்..சோகத்தில் ரசிகர்கள் !
லாஸ் ஏஞ்சல்ஸ் : இசைக்கலைஞரும் ராக் அன் ரோல் எல்விஸ் மகள் லிசா மேரி பிரெஸ்லி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 54.
லிசா மேரி பிரெஸ்லி எல்விஸ் மற்றும் பிரிசில்லா பிரெஸ்லியின் ஒரே மகளான லிசா மேரி பிரெஸ்லி 1968ம்ஆண்டு மெம்பிஸில் பிறந்தார். அவரது தந்தை ராக் அன் ரோல் எல்விஸ் 1977ம் ஆண்டு இறந்த போது லிசா மேரி ஒன்பது வயது சிறுமியாக இருந்தார்.

தந்தையை போல இசையில் ஈடுபாடு கொண்ட லிசா மேரி, 2000ம் ஆண்டு சொந்த ஆல்பங்களை வெளியிட்டார். 2003ம் ஆண்டு "டூம் இட் மே கன்சர்ன், அதைத் தொடர்ந்து "நவ் வாட்" பல ஆல்பங்களை பல ஆல்பங்களை வெளியிட்டு பல மேடை நிகழ்ச்சிகளில் தோன்றினார்.
நான்கு முறை திருமணம் செய்து கொண்டட லிசா மேரி, 1994 ம் ஆண்டு மைக்கேல் ஜாக்சனை திருமணம் செய்து கொண்டார். இரண்டு வருடம் அவருடன் வாழ்ந்த லிசா மேரி, பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 1996ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்து விட்டு நடிகர் நிக்கோலஸ் கேஜ்சை திருமணம் செய்து கொண்டார்.

நிக்கோலஸ் கேஜ்சுடன் வெறும் நான்கு மாதங்கள் வாழ்ந்த நிலையில் அவரையும் விவாகரத்து செய்தார். இதையடுத்து டேனி கீஃப் திருமணம் செய்து பின்னர் பிரிந்தார். நான்காவது கிட்டார் கலைஞரும் இசை தயாரிப்பாளருமான மைக்கேல் லாக்வுட்டுடன் இவருக்கு திருமணம் நடந்த நிலையில் அவரையும் 2021ம் ஆண்டு விவாகரத்து செய்தார். கணவர் டேனி கீஃப்க் பிறந்த தனது குழந்தைகளான நடிகர் ரிலே கியூஃப் மற்றும் பெஞ்சமின் கியூஃப் ஆகியோருடன் லாஸ் ஏஞ்சல்ஸில் வசித்து வந்தார்.
இந்நிலையில், லிசா மேரி பிரெஸ்லிக்கு நேற்று மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்தை அவரது தாயார் உறுதிப்படுத்தி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எனது அழகான மகள் லிசா மேரி எங்களை விட்டுச் சென்றுவிட்டார் என்ற செய்தியை கனத்த இதயத்துடன் நான் பகிர்ந்து கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
ஜனவரி 10ந் தேதி நடந்த கோல்டன் கோல்ப் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லிசா மேரி பிரெஸ்லி, சில நாட்களிலேயே உயிரிழந்துள்ளது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. லிசா மேரி பிரெஸ்லி மறைவுக்கு திரைப்பிரபலங்கள் பலரும் இணையத்தின் வழியாக இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
-
பிக் பாஸ் சீசன் 6 கிராண்ட் பினாலே...அசீம் ஹாஷ்டேக் டிரெண்டிங்...பரபரப்பாகும் பிக் பாஸ் களம்!
-
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி... கேப்டன் மில்லர் மேக்கிங் கிளிம்ப்ஸ்... தனுஷின் மாஸ் லுக் அவுட்
-
Bigg Boss Tamil 6 Title Winner: பிக்பாஸ் தமிழ் சீசன் 6 டைட்டிலை தட்டிச் சென்ற அசீம்.. மக்கள் நாயகன்!