தனுஷ் சிறந்த நடிகர்.. அவரிடம் நடித்தது நல்ல அனுபவம்.. ஹாலிவுட் ஜேம்ஸ் காஸ்மோ !

சென்னை : ஹாலிவுட் நடிகரான ஜேம்ஸ் காஸ்மோ நடிகர் தனுஷுடன் ஜகமே தந்திரம் படத்தில் நடித்து இருக்கிறார். தனுஷுடன் நடித்த அனுபவம் பற்றியும் படத்தில் தான் எப்படி ஒப்பந்தமானேன் என்பதை பற்றியும் பகிர்ந்து இருக்கிறார்.

Recommended Video

பட்ட இடத்தில் படும் | Dhanush injury Troll

நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஹாலிவுட்டின் பிரபலமான நடிகர் இவர் பிரேவ் ஹார்ட், ட்ராய், தி கிரானிகல்ஸ் ஆப் நார்நியா மற்றும் சமீபத்தில் உலக புகழ் பெற்ற கேம் ஆப் த்ரோன்ஸ் என்கிற பிரம்மாண்ட நாடகத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இங்கிலாந்தின் ஸ்காட்லாந்தை சொந்த ஊராக கொண்ட நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ தற்போது லாக்டவுன் காலத்தை வீட்டிலே உடற்பயிற்சி மற்றும் சில பொழுதுபோக்குகள் மூலம் நேரத்தை செலவிட்டு வருகிறார்.

 Hollywood star James Cosmo

ஜேம்ஸ் காஸ்மோவின் உதவியாளருக்கு இந்தியாவில் இருந்து முதலில் இந்திய படத்தில் நடிக்க அழைப்பு வந்திருக்கிறது ஆனால் அவரின் உதவியாளரோ முதலில் இந்திய படங்களில் ஜேம்ஸ் காஸ்மோ எப்படி நடிப்பார் என்று நிராகரித்து இருக்கிறார். ஆனால் கார்த்திக் சுப்பராஜின் தொடர் முயற்சி செய்தி ஜேம்ஸ் காஸ்மோவை சென்றடைந்து பின் லண்டன் வந்த கார்த்திக் ஜேம்ஸ்க்கு படத்தின் கதையை சொல்லி ஓகே வாங்கினார் .

இதை பற்றி ஜேம்ஸ் காஸ்மோ கூறுகையில் தான் இந்த படத்தில் ஒரு லண்டன் கேங்ஸ்டராக நடித்திருப்பதாகவும். மேலும் படப்பிடிப்பின் போது கார்த்திக் சுப்புராஜிடம் எனக்கு படத்தில் மற்ற இந்திய படங்களை போல ஆடல் காட்சியெல்லாம் இருக்கிறதா என்று கேட்டுள்ளார் ஆனால் கார்த்தியோ இந்த படத்தில் அது இல்லை என்று மறுத்துவிட்டாராம்.

 Hollywood star James Cosmo

ஆனாலும் படப்பிடிப்பின் போது ஒரு சண்டை காட்சி முடிந்ததும் தானும் தனுஷும் ஆடியதாக குறிப்பிட்டு கூறியிருந்தார். அப்படியே தனுஷ் பற்றி கூறிய நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ தனுஷ் ஒரு சிறந்த நடிகர் என்றும் அவருடன் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது என்றும் கூறினார். மேலும் தனுஷ் தினந்தோறும் படப்பிடிப்புக்கு வரும் போது விளையாட்டு தனமான முக பாவனைகளுடன் படப்பிடிப்புக்கு வருவார் இது அவர் பல படங்களில் நடித்த அனுபவமாகக் கூட இருக்கலாம் என கூறியிருந்தார்.

 Hollywood star James Cosmo

மேலும், ஜேம்ஸ் காஸ்மோ, கார்த்தி சுப்புராஜின் பீட்சா படத்தை பார்த்தேன் படம் எனக்கு மிகவும் பிடித்தது என்று கூறியிருக்கிறார். ஜகமே தந்திரம் படம் கிட்டதட்ட முடிந்திருக்கிறது இதனால் லாக்டவுன் முடிந்ததும் படத்தை பற்றிய அப்டேட் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Read more about: danush film தனுஷ்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X