சமந்தா படத்தில் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்... வைரலாகும் புகைப்படம்!

சென்னை : நடிகை சமந்தாவின் நடிப்பில் கதாநாயகியை மையமாக வைத்து உருவாகிவரும் படம் யசோதா. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் புதிய இணைப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

Recommended Video

அரபிக்குத்து பாட்டுக்கு ஆட்டம் போட்ட சமந்தா.. அட.. இவங்களையே ஹீரோயினா போட்டு இருக்கலாம்!

நடிகை சமந்தா

நடிகை சமந்தா

நடிகை சமந்தாவின் நடிப்பில் விரைவில் தமிழில் வெளியாகவுள்ளது காத்து வாக்குல ரெண்டு காதல். இதேபோல பல படங்கள் மற்றும் வெப் சீரீசில் இவர் கமிட்டாகி நடித்து வருகிறார். இந்நிலையில கதாநாயகியை மையமாக வைத்து இவர் நடித்துவரும் படம் யசோதா.

யசோதா படம்

யசோதா படம்

இந்தப் படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டில் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிகவும் பிரம்மாண்டமான அளவில் இந்தப் படம் உருவாகி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது.

பான் இந்தியா படம்

பான் இந்தியா படம்

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தியில் உருவாகிவரும் இந்தப் படத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடித்து வருகிறார். வரலட்சுமி சரத்குமாரும் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். மணிசர்மா மற்றும் சுகுமார் படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

ஆக்ஷன் த்ரில்லர் படம்

ஆக்ஷன் த்ரில்லர் படம்

இதேபோல ஹரி மற்றும் ஹரீஷ் படத்தை இயக்கி வருகின்றனர். ஆக்ஷன் த்ரில்லராக படம் உருவாகிவரும் நிலையில், படத்தில் சில சண்டைக் காட்சிகளிலும் சமந்தா நடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் யான்னிக் பென் இந்தப் படத்தில் ஸ்டண்ட் மாஸ்டராக இணைந்துள்ளார்.

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர்

இவர் முன்னதாக ஹாலிவுட் படங்களில் மட்டுமின்றி டோலிவுட்டிலும் படங்களில் பணியாற்றியுள்ளார். விக்ரமின் துருவ நட்சத்திரம் படத்திலும் இவர் ஸ்டண்ட் காட்சிகளை அமைத்துள்ளார். இதையடுத்து யசோதா படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே யான்னிக் பென் மற்றும் சமந்தா இணைந்து எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X