அந்த ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரை தட்டித் தூக்கிய சிவகார்த்திகேயன்.. மாவீரன் படத்தில் சம்பவம் இருக்கு!

சென்னை: முழுக்க முழுக்க காமெடியாக பண்ண பிரின்ஸ் படம் ஒர்க்கவுட் ஆகவில்லை என தெரிந்ததுமே அடுத்து மாவீரன் படத்தில் ஆக்‌ஷனில் அதிரடி காட்ட சிவகார்த்திகேயன் முடிவெடுத்துள்ளார்.

அதற்காக ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரை ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மடோன் அஸ்வினுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பிரச்சனை என பரவிய வதந்திக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தீயாக நடைபெற்று வருகிறது.

காமெடி ஒர்க்கவுட் ஆகல

காமெடி ஒர்க்கவுட் ஆகல

டாக்டர் படம் போல டார்க் காமெடி வொர்க்கவுட் ஆன நிலையில், பழைய ஸ்டைலில் க்ரிஞ்ச் காமெடி ட்ரை பண்ண சிவகார்த்திகேயனுக்கு இந்த தீபாவளி நல்ல பாடத்தை கற்றுத் தந்தது. டோலிவுட் இயக்குநர் என அனுதீப்பை நம்பிப் போன நிலையில், மனுஷன் சிவகார்த்திகேயனை வச்சு செய்து விட்டார் என அவரது ரசிகர்களே விரக்தியில் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.

மாவீரன் மீது கவனம்

மாவீரன் மீது கவனம்

சிவகார்த்திகேயனின் அடுத்த படமான மாவீரன் நிச்சயம் சூப்பர் ஹிட் அடிக்க வேண்டும் 100 கோடி பாக்ஸ் ஆபிஸில் இணைய வேண்டும் என ரொம்பவே கவனமாக ஒவ்வொரு விஷயத்தையும் சிவகார்த்திகேயன் அணுகி வருகிறார். மண்டேலா படத்திற்காக தேசிய விருது பெற்ற நிலையில், மடோன் அஸ்வின் மீதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

செம காஸ்டிங்

செம காஸ்டிங்

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இந்த படத்தில் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். வில்லனாக மிஷ்கின் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். மேலும், புஷ்பா வில்லன் நடிகர் சுனிலும் முக்கிய ரோலில் இணைந்துள்ளார். சரிதா ஒரு அட்டகாசமான கதாபாத்திரத்தில் கமிட் ஆகி உள்ளார். நிச்சயம் மாவீரன் மாஸ் காட்டும் என சிவகார்ட்திகேயன் ரசிகர்கள் ஆர்வமுடன் அந்த படத்தின் அப்டேடுக்காக காத்திருக்கின்றனர்.

ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர்

ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநர்

இந்நிலையில், பிரபல ஹாலிவுட் ஸ்டன்ட் இயக்குநரான யான்னிக் பென் மாவீரன் படத்தில் ஸ்டன்ட் காட்சிகளை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார் என பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. சிங்கிள் ஷாட்டில் சண்டைக் காட்சிகளை எடுப்பதில் இவர் மிகப்பெரிய கில்லாடி என்பதை சமீபத்தில் இவர் பணிபுரிந்த வெந்து தணிந்தது காடு படமே நிரூபித்து இருக்கும்.

பல படங்களில்

பல படங்களில்

சமந்தாவின் யசோதா, சிம்புவின் வெந்து தணிந்தது காடு, ஃபேமிலி மேன் வெப்சீரிஸ், துருவ நட்சத்திரம் உள்ளிட்ட பல படங்களுக்கு ஹாங்காங்கை சேர்ந்த சண்டை பயிற்சி இயக்குநரான யானிக் பென் தான் ஸ்டன்ட் கொரியோகிராஃபி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்மர் ரிலீஸ்

சம்மர் ரிலீஸ்

தீபாவளி ரிலீஸ் ஆன பிரின்ஸ் படம் சொதப்பிய நிலையில், வரும் சம்மர் வெளியீடாக மாவீரன் படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என்கிற முனைப்புடன் சிவகார்த்திகேயன் செயல்பட்டு வருகிறார். அதற்கு முன்னதாக மார்ச் ரிலீஸாக படம் வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர்.

கமல் படம் எப்போது

கமல் படம் எப்போது

ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் பேனரில் ஒரு படம் நடிக்கப் போவதாக சிவகார்த்திகேயன் பிக் பாஸ் சீசன் 5ன் கிராண்ட் ஃபினாலேவில் தெரிவித்து இருந்தார். இந்நிலையில், அந்த படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிங்கப்பாதை என்கிற படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகின. அயலான் படம் அடுத்த ஆண்டாவதாக வெளியாகுமா என்றும் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X