தேவாவின் பாட்டுக்கு படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு!
பக்திப் படம் ஒன்றின் படப்பிடிப்பின்போது இசையமைப்பாளர் தேவாவின் பாடல் ஒலித்த போது, நல்ல பாம்பு படமெடுத்து ஆடியது.
ஜோதி விநாயகர் சினிமாஸ் என்ற பட நிறுவனம் 'மேற்கு முகபேர் ஸ்ரீகனக துர்கா'என்ற பெயரில் பக்தி படம் ஒன்றை தயாரிக்கிறது.

திவ்யா நாகேஷ் - ஜான்விகா
இந்த படத்தில் புதுமுகங்கள் மகி, சரவணன் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். திவ்யா நாகேஷ், ஜான்விகா இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் டி.பி.கஜேந்திரன் நடிக்கிறார். மற்றும் நதியாஸ்ரீ, வைகை கவிதா, ராகவி, சுஷ்மிதா,ஸ்ரீஹரி, பிரதீப், ஜெனிபர் ஆகியோருடன் ஏராளமான நகைச்சுவை நடிகர்களும் நடிக்கிறார்கள்.

தேவா
இந்தப் படத்துக்கு தேவா இசையமைத்துள்ளார். என்டி சிவமனோகரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தை ,திரைக்கதை,வசனம்,பாடல்கள் எழுதி E.ஜெயபால் சுவாமி தயாரிக்கிறார். கதை ,திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி ஈ ஜெயபால் சுவாமி தயாரிக்கிறார். சந்திர கண்ணையன் இயக்குகிறார்.

அஞ்சுதலை நாகம்மா...
படம் பற்றி இயக்குனர் கூறுகையில், "இந்த படத்திற்கு ஜெயபால் சுவாமி எழுதிய "அஞ்சுதலை நாகம்மா கொஞ்சி விளயாடுதம்மா" என்ற பாடலை தேவா இசையமைத்து பாடியுள்ளார். இந்த பாடலின் படப்பிடிப்பில் படத்தின் நாயகிகள் திவ்யா மற்றும் ஜான்விகாவும் பாம்பு வடிவத்தில் உடைகள் அணிந்து தீச்சட்டி ஏந்திய பெண்களுடன் நடன இயக்குனர் சம்பத் குமார் நடன அமைப்பில் நடனமாடி கொண்டிருந்தனர்.

படமெடுத்து ஆடிய நல்ல பாம்பு
அபொழுது மகுடி இசைக்கும் தாளத்திற்கும் தேவா பாடிய பாடல் வேகத்திற்கும் குழுவினர் ஈடு கொடுத்து ஆடும்போது யாரும் எதிர்பாராதவிதமாக கோவிலை உறைவிடமாக கொண்டு அங்குள்ள நாகாத்தம்மன் சந்நிதியில் படுத்திருக்கும் நல்ல பாம்பு படமெடுத்து ஆடியது. இதைப் பார்த்து படக் குழுவினர் பயந்து நடுங்கிவிட்டனர். பின்னர் அதுவே போய்விட்டது," என்றார்.


Click it and Unblock the Notifications











