குஷ்புவின் கூந்தல் ரகசியம்… ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
சென்னை : இந்திய சினிமாவின் எவர்க்ரீன் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை குஷ்பூ இப்பொழுது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் "அண்ணாத்த " திரைப்படத்தில் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரஜினிகாந்துடன் இணைந்து நடித்து வருகிறார்.
Recommended Video
அண்ணாத்த திரைப்படத்தின் வெளியீட்டுக்காக திரையுலகமே எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கும் நிலையில் குஷ்பு அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.
அவ்வாறு இப்பொழுது குஷ்பூ தனது அழகிய கூந்தலுக்கு பின் உள்ள ரகசியத்தை ரசிகர்களுக்காக வெளிப்படுத்தியுள்ளார்.

அனைவருக்கும் பிடித்தமான
என்றும் இளமை இப்பொழுதும் அதே அழகு என தனது மயக்கும் அழகின் மூலம் ரசிகர்களை கட்டிப் போட்டு வரும் நடிகை குஷ்பூ 1990 களிலிருந்து இன்றுவரை அனைவருக்கும் பிடித்தமான சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

திரைப்படங்களை தயாரித்து
திரைப்படங்கள், தொலைக்காட்சி தொடர்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர், அரசியல் என அனைத்திலும் பொளந்து கட்டும் குஷ்பூ சமீப காலமாக திரைப்படங்களில் நடிக்காமல் சில திரைப்படங்களை மட்டுமே தயாரித்து வந்த நிலையில் இப்பொழுது மீண்டும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் உருவாகிவரும் திரைப்படம் ஒன்றில் நடித்துவருகிறார்.

"அண்ணாத்த" திரைப்படத்தில்
நடிகர்கள் கார்த்திக், பிரபு, ரஜினிகாந்த், கமல்ஹாசன், சத்யராஜ், விஜயகாந்த், என பெரும்பாலான அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்த குஷ்பூ "வில்லு " உள்ளிட்ட ஒரு சில திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் வந்து சென்றதையடுத்து இப்போது ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் "அண்ணாத்த" திரைப்படத்தில் முக்கியமான நீண்ட கதாபாத்திரம் ஒன்றில் நடித்து வருகிறார்.

எதிர்பார்ப்பு
ரஜினிகாந்த் மற்றும் குஷ்பு இருவரும் இணைந்து 90 களில் நடித்த பல படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்று வந்த நிலையில் இந்த ஜோடி இப்பொழுது மீண்டும் பல ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்துள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

செம வைரலாகி
இவ்வாறு " அண்ணாத்த " திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஒருபுறம் காத்துக்கொண்டிருக்க குஷ்பு அவ்வப்போது இன்ஸ்டாகிராம் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிடும் புகைப்படங்கள் செம வைரலாகி வருகின்றது.

ரகசியத்தை வெளியிட்டுள்ளார்
இந்நிலையில் பல ஆண்டுகளாக தான் பயன்படுத்தி வந்த ரகசியம் ஒன்றை ரசிகர்களுக்காக வெளிப்படுத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். அழகை பராமரிப்பதில் மிகவும் ஆர்வம் கொண்ட நடிகை குஷ்பூ அவ்வப்போது முகத்திற்கு தேவையான அழகுபடுத்தும் ஃபேஸ்பேக் பற்றிய தகவல்களை ரசிகர்களுக்கு கொடுத்து வந்த நிலையில் இப்பொழுது தனது அழகான கூந்தலுக்கு பின்னுள்ள ரகசியத்தை வெளியிட்டுள்ளார்.

ஹேர் பேக்
தனது அழகான கூந்தலை பராமரிக்க பண்படுத்தும் ஹேர் பேக் எவ்வாறு தயாரிக்க வேண்டும் அதற்கு என்னென்ன பொருட்கள் தேவை என தெளிவாக ரசிகர்களுக்கு குறிப்பிட்டவாறு ஹேர் பேக்கை வீட்டில் தயாரித்து கூந்தலில் பூசிக் கொண்டு ரசிகர்களுக்காக வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று இப்பொழுது அதிகமாக பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











