Kantara chapter 1: இன்னும் ஒரு வருஷம் காத்திருக்கனுமா.. காந்தாரா 2 படத்தின் ரிலீசை அறிவித்த படக்குழு
ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவன தயாரிப்பாக கடந்த ஆண்டில் வெளியான காந்தாரா படம் குறைவான பட்ஜெட்டில் உருவாகி மிரட்டலான அனுபவத்தை ரசிகர்களுக்கு கொடுத்திருந்தது. இந்தப்படம் 16 கோடி ரூபாய்களில் உருவாகி 400 கோடிகளுக்கும் மேல் வசூலித்த நிலையில் இந்தப் படத்தின் அடுத்த பாகத்தை தற்போது தயாரிப்பாளர்கள் உருவாக்கி வருகின்றனர்.
காந்தாரா படத்தின் பிரிக்குவலாக உருவாகி வருகிறது காந்தாரா 2. ரிஷப் ஷெட்டி நடிப்பில் உருவாகியிருந்த காந்தாரா படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியானது. இந்நிலையில் தற்போது உருவாகிவரும் காந்தாரா 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பை தயாரிப்பு தரப்பு வெளியிட்டுள்ளது.

காந்தாரா படம்: ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத் தயாரிப்பாக கடந்த ஆண்டில் வெளியான காந்தாரா படம் மிகக் குறைந்த பட்ஜெட்டில் உருவாகி பல மடங்கு லாபத்தை பெற்று கொடுத்திருந்தது. 16 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான காந்தாரா படம் 400 கோடிகளுக்கும் மேலாக வசூலை குவித்தது. குறைந்த பட்ஜெட் படமாக உருவாகியிருந்த இந்தப் படத்தின் வசூல் யாருமே எதிர்பார்க்காதது. இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகி வருகிறது. இந்த படத்தின் அடுத்த பாகமாக இல்லாமல் படத்தின் பிரிக்குவலாக காந்தாரா 2 தற்போது உருவாகி வருகிறது.
காந்தாரா சாப்டர் 1 ரிலீஸ் தேதி: முதல் பாகத்தை காட்டிலும் காந்தாரா 2 படத்திற்காக மிக அதிக அளவில் மெனக்கெட உள்ளதாக முன்னதாக இந்த படத்தின் இயக்குநர் மற்றும் நடிகர் ரிஷப் ஷெட்டி தெரிவித்திருந்தார். இந்த படத்திற்காக பல வரலாற்று நிகழ்வுகளை தான் ஆய்வு செய்து படத்தில் இணைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார். முதல் பாகத்தை காட்டிலும் மிகவும் பிரம்மாண்டமாக காந்தாரா 2 படம் உருவாகி வருகிறது. முதல் பாகம் ஏற்படுத்திய எதிர்பார்ப்பை தொடர்ந்து காந்தாரா 2 படத்தின் ரிலீஸ் தேதி குறித்து ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்பை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் இந்தப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை தற்போது ஹோம்பாலே நிறுவனம் அறிவித்துள்ளது.
அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ்: அடுத்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தசராவை முன்னிட்டு காந்தாரா சாப்டர் 1 படம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளதாக தற்போது ஹோம்பாலே ஃபிலிம்ஸ் அறிவித்துள்ளது. இதையடுத்து இன்னும் ஒரு ஆண்டு காலம் இந்த படத்தின் ரிலீசுக்காக காத்திருக்க வேண்டுமா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் பிரம்மாண்டத்தை புகுத்தி வருகிறார் இயக்குநர் ரிஷப் ஷெட்டி. அந்த வகையில் இந்த படத்தை ரசிகர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்றபடி கொடுப்பதற்கு இத்தனை மாத காலங்கள் தேவைப்படுவதாக படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிறும் எதிர்பார்ப்பு: முதல் பாகத்தின் மூலம் மிரட்டலான திரைக்கதையை மற்றும் காட்சி அமைப்புகளை ரசிகர்களுக்கு கொடுத்திருந்த இயக்குநர், 2வது பாகத்தில் அதை மேலும் அதிகரிக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளதால் இந்த படம் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. முதல் பாகமே தமிழ், தெலுங்கு, கன்னடம் என பான் இந்தியா படமாக வெளியான நிலையில், தற்போது உருவாகிவரும் காந்தாரா சாப்டர் 1 படமும் பான் இந்தியா படமாகவே உருவாகி வருகிறது. படத்தின் இசையும் முதல் பாகத்தில் மிரட்டலாக அமைந்த நிலையில், இந்தப் படத்திலும் அது தொடரும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











