For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காதலில் அதுதான் ரொம்ப முக்கியம்.. கமலின் மகள் கொடுத்த தடாலடி அட்வைஸ்!

    |

    சென்னை: காதலில் நேர்மைதான் ரொம்ப முக்கியம் என நடிகை அக்ஷரா ஹாசன் தெரிவித்துள்ளார்.

    நடிகர் கமல்ஹாசனின் இளைய மகளான நடிகை அக்ஷரா ஹாசன் கடந்த 2015ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் அமிதாப் பச்சனுடன் இணைந்து சமிதாப் என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து நடிகர் அஜித்துடன் விவேகம் படத்திலும் நடித்திருந்தார் அக்ஷரா.

    விவேகம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான அக்ஷரா, விக்ரமுடன் கடாரம் கொண்டான் படத்தில் நடித்தார். இந்த படத்தில் அக்ஷராவின் நடிப்பு பேசப்பட்டது.

    சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி... பேஸ்புக்கில் கவர்ச்சிப் படங்கள் ரிலீஸ் - ரசிகர்களை குஷிப்படுத்தவாம் சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி... பேஸ்புக்கில் கவர்ச்சிப் படங்கள் ரிலீஸ் - ரசிகர்களை குஷிப்படுத்தவாம்

    ஆபாச போட்டோக்கள்

    ஆபாச போட்டோக்கள்

    அக்ஷரா ஹாசனின் பெயர் அடிக்கடி சர்ச்சையில் சிக்கி வந்தது. குறிப்பாக கடந்த ஆண்டு ஆபாச புகைப்படங்கள் இணையத்தில் லீக்கானது.

    மதமாற்றம்

    மதமாற்றம்

    அந்த புகைப்படங்களை அக்ஷராதான் வெளியிட்டிருப்பார் என்று தகவல் வெளியானது. ஆனால் அதனை தான் வெளியிடவில்லை என்று மறுத்தார் அக்ஷரா, தொடர்ந்து மதமாற்றம் என்பது உள்ளிட்டது தொடர்பாக செய்தியில் அடிபட்டு வந்தார் அக்ஷரா.

    திரில்லர் ஸ்டோரி

    திரில்லர் ஸ்டோரி

    இந்நிலையில் தற்போது இயக்குநர் விஷ்ணுவர்தன் தயாரிக்கும் ‘ஃபிங்கர்டிப்' என்ற வெப் சீரிசில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார் அக்‌‌ஷரா ஹாசன். சமூக வலைதளங்களை வைத்து திரில்லர் ஸ்டோரியாக உருவாக்கப்பட்டுள்ளது ஃபிங்கர் டிப்.

    பிரஸ் மீட்

    பிரஸ் மீட்

    இந்த வெப் சீரிஸ் வரும் ஆகஸ்ட் 21ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதிக்குள் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் இத்தொடரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

    நேர்மைதான் முக்கியம்

    நேர்மைதான் முக்கியம்

    இதில் பங்கேற்ற அக்ஷரா ஹாசனிடம் காதலில் எது முக்கியம்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அக்ஷரா காதலில் நேர்மை மிக முக்கியம் என்று பதிலளித்தார். மேலும் சமூகவலைதளங்கள் மற்றும் மொபைலிடம் இருந்து சற்று விலகி இருங்கள் என்று கூறிய அக்ஷரா சக மனிதர்களிடம் பேசுங்கள் என்றும் கூறினார்.

    English summary
    Honest is mandatory in love says Akshra hassan in Finggertip Web series press meet.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X