Honey Rose: ஆடையை அட்ஜெஸ்ட் செய்துக் கொண்டே இருந்த ஹனி ரோஸ்.. தீயாக பரவும் வீடியோ.. என்ன ஆச்சு?

திருவனந்தபுரம்: மலையாள நடிகையான ஹனி ரோஸ் தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பல கடை திறப்பு விழாக்களுக்கும் நிகழ்ச்சிகளுக்கும் சென்று வரும் அவரது வீடியோக்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. சமீபத்தில் உடலை ஒட்டியபடி ஜிம் உடை போன்ற துணியை அணிந்துக் கொண்டு அவர் வெளியே சென்ற நிலையில், அவரது உடையை அடிக்கடி இழுத்து விட்டுக் கொண்டே இருக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

கடந்த ஆண்டு பாலய்யா நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் அம்மாவாகவும் ஹீரோயினாகவும் நடித்து தெலுங்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் ஹனி ரோஸ். மலையாளத்தில் மோகன்லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து வரும் இவர் தமிழில் சுந்தர். சி, ஜெய் நடித்த பட்டாம்பூச்சி படத்தில் நடித்திருந்தார்.

Honey Rose adjusting her dress at gym opening function video goes trending

ரேச்சல் ரெடியாகுது: முதல் கனவே படத்தின் மூலமே பல ஆண்டுகளுக்கு முன்பே தமிழில் அறிமுகமானவர் ஹனி ரோஸ். ரேச்சல் படத்தில் லீடு ரோலில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ஆனந்தி பாலா அந்த படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில், ஹனி ரோஸ் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சோஷியல் மீடியாவில் செம ஆக்டிவாக உள்ளார்.

ரசிகர்களை மயக்கும் ஹனி ரோஸ்: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் நடித்து வரும் ஹனி ரோஸ் சமீப காலமாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடும் போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் காரணமாக வேறலெவலில் இளைஞர்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறார். தனது எக்ஸ்ட்ரா அழகை காட்டி இளம் ரசிகர்களை வசீகரித்து வரும் ஹனி ரோஸ் விதவிதமான கவர்ச்சி உடைகளை அணிந்துக் கொண்டு மெய் மறக்கச் செய்து வருகிறார்.

ஹீரோயின் சென்ட்ரிக்: ஷார்ப்பான கத்தியை எடுத்து கறியை வெட்டும் படி முரட்டுத்தனமாக லுக்கில் போஸ் கொடுத்துள்ளார் ரேச்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக நடிகை ஹனி ரோஸ். அறிமுக இயக்குநர் ஆனந்தி பாலா இந்த படத்தை இயக்கி வருகிறார். ராகுல் மனாபத் திரைக்கதை எழுதி உள்ளார். சந்துரு செல்வராஜ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் ஒரு பாலய்யாவுக்கு அம்மாவாகவும் அப்பா பாலகிருஷ்ணாவுக்கு ஹீரோயினாகவும் வந்து ஆட்டம் போட்ட ஹனி ரோஸா இது என ரசிகர்கள் தற்போது அவரது லேட்டஸ்ட் வீடியோக்களை பார்த்து ஷாக் ஆகி வருகின்றனர்.

Honey Rose adjusting her dress at gym opening function video goes trending


ஆடையை இழுத்து விட்டுக் கொண்டே: சமீபத்தில், ஜிம் ஒன்றை திறக்கும் விழாவுக்கு சென்ற ஹனி ரோஸ் அதற்காக ரெட் கலர் டைட் டாப் மற்றும் கருப்பு நிற ஜிம் பேன்ட் அணிந்து கொண்டு சென்றார். அந்த நிகழ்ச்சி முடியும் வரை அவரையே ரசிகர்கள் மற்றும் அங்கிருந்தவர் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்த நிலையில், அடிக்கடி ஆடையை இழுத்து விட்டுக் கொண்டு சரி செய்துக் கொண்டே இருந்த காட்சிகள் வெளியாகி உள்ளன.

பாடி ஷேமிங்: ஹனி ரோஸ் சமீப காலமாக ஓவர் வெயிட் போட்டு விட்டார் என்றும் இவரை எல்லாம் வைத்து ஜிம் திறப்பு விழா எப்படித்தான் நடத்துகின்றனரோ என ஹனி ரோஸை பயங்கரமாக நெட்டிசன்கள் கமெண்ட் பக்கத்தில் ட்ரோல் செய்து வருகின்றனர். டெரி மெரி எனும் இந்தி படத்திலும் நடிக்க இவர் கமிட் ஆகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X