Honey Rose: ப்பா.. முரட்டுத்தனமா கறியை வெட்டும் ஹனி ரோஸ்.. ரேச்சல் ஃபர்ஸ்ட் லுக்கே மிரட்டுதே!
திருவனந்தபுரம்: இந்த ஆண்டு வெளியான பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் பாலய்யாவுக்கு அம்மாவாகவும் ஜோடியாகவும் நடித்து அசத்திய நடிகை ஹனி ரோஸ் அடுத்ததாக உமன் சென்ட்ரிக் படத்தில் நடித்து வருகிறார்.
ரேச்சல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி ரசிகர்களை மிரட்டி வருகிறது.

அறிமுக இயக்குநர் ஆனந்தி பாலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் வெறித்தனமாக கறியை வெட்டும் லுக்கில் ஹனி ரோஸ் ஆக்ரோஷமாக போஸ் கொடுத்துள்ளார்.
ஹாட் ஹனி ரோஸ்: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ஹனி ரோஸ் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஹாட் போட்டோக்கள் காரணமாக வேறலெவலில் யங்ஸ்டர் மத்தியில் டிரெண்டாகி வருகிறார்.
தனது எக்ஸ்ட்ரா அழகை காட்டி இஷ்டத்துக்கு ரசிகர்களை வசீகரித்து வரும் ஹனி ரோஸ் திடீரென ரேச்சலாக கொலைவெறி பிடித்த பெண்ணாக மாறி ஃபர்ஸ்ட் லுக்கில் மிரட்டி எடுத்துள்ளார்.

ரேச்சல் ஃபர்ஸ்ட் லுக்: ஷார்ப்பான கத்தியை எடுத்து கறியை வெட்டும் படி முரட்டுத்தனமாக லுக்கில் போஸ் கொடுத்துள்ளார் ரேச்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கிற்காக நடிகை ஹனி ரோஸ். அறிமுக இயக்குநர் ஆனந்தி பாலா இந்த படத்தை இயக்கி வருகிறார். ராகுல் மனாபத் திரைக்கதை எழுதி உள்ளார். சந்துரு செல்வராஜ் இந்த படத்துக்கு இசையமைக்கிறார்.
பாவாடை மற்றும் ஜாக்கெட் மட்டும் அணிந்துக் கொண்டு கொலை வெறியுடன் போஸ் கொடுத்துள்ள ஹனி ரோஸின் இந்த ரேச்சல் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
மோஷன் போஸ்டர்: எருமை மாட்டு தலை எல்லாம் வெட்டிக் கிடப்பது போலவும், ரத்தம் தெறிக்க அந்த இடமே ஒரு மர்மமான இடமாக இருக்க அங்கே கறி வெட்டும் பெண்ணாக காட்சி தருகிறார் ஹனி ரோஸ்.
பாலய்யா படத்தில் அம்மாவாகவும் ஹாட்டான ஹீரோயினாகவும் வந்து ஆட்டம் போட்ட ஹனி ரோஸா இது என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், த்ரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ், மஞ்சு வாரியர் என பல முன்னணி நடிகைகள் சோலோவாக படங்களில் நடித்து வரும் நிலையில், ஹனி ரோஸும் தற்போது அந்த ரூட்டை பிடித்திருக்கிறார்.


Click it and Unblock the Notifications