அட கன்றாவியே.. என்ன டிரெஸ் இது.. சோபாவுக்கு கவர் போட்ட மாதிரி.. ஹனி ரோஸை பங்கம் பண்ணும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகை ஹனி ரோஸ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்களை நெட்டிசன்கள் பயங்கரமாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
மலையாள நடிகையான ஹனி ரோஸ் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்து தென்னிந்திய நடிகையாக வலம் வருகிறார். இந்த ஆண்டு பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தில் அப்பா பாலய்யாவுக்கு ஜோடியாகவும் மகன் பாலய்யாவுக்கு அம்மாவாகவும் நடித்திருந்தார்.

இளம் நடிகையை பாலய்யாவுக்கே அம்மா ஆக்கிட்டீங்களே என ஏகப்பட்ட ட்ரோல்கள் குவிந்த நிலையில், தற்போது நடிகையின் லேட்டஸ்ட் டிரெஸ்ஸை பார்த்து பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
கண்ணை பறிக்கும் கவுன்: இன்ஸ்டாகிராமில் 3.7 மில்லியன் ஃபாலோயர்களை கொண்டுள்ள நடிகை ஹனி ரோஸ் லேட்டஸ்ட்டாக வெல்வெட் துணியில் உடலை ஒட்டியபடி ஸ்லீவ்லெஸ் கவுனை அணிந்து கொண்டு பிரம்மாண்ட பேரழகை காட்டி ரசிகர்களை திணறடித்துள்ளார்.
அந்த உடையை அணிந்து கொண்டு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ஹனிரோஸ் அதன் போட்டோக்களையும் வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்துள்ளார்.

லட்சக்கணக்கில் லைக்ஸ்: 31 வயதே ஆன நடிகை ஹனி ரோஸ் இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோக்களையும் போட்டோக்களையும் பார்த்து ஜொள்ளு விட்டு வரும் ரசிகர்கள் லட்சக் கணக்கில் லைக்குகளையும் ஹார்ட்டின் எமோஜிக்களையும் பதிவிட்டு வருகின்றனர்.
சோபா துணி: அதே சமயம் வழக்கம் போல ஹனி ரோஸ் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளை ட்ரோல் செய்து வரும் நெட்டிசன்கள் சோபாவுக்கு துணி போட்டது போல இருக்கு என்றும் காருக்கு கவர் போட்டது போல இருக்கு என்றும் ரெக்லைனர் சோபா என்றும் மரண கலாய் கலாய்த்து வருகின்றனர்.
பாடி ஷேமிங்: மேலும், சில நெட்டிசன்கள் மோசமாக ஹனி ரோஸை பாடி ஷேமிங்கும் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு தெலுங்கில் வெளியான வீர சிம்ஹா ரெட்டி படத்தைத் தொடர்ந்து மலையாளத்தில் சமீபத்தில் வெளியான பூக்காலம் படத்தில் ஹனி ரோஸாகவே நடித்திருந்தார். அடுத்ததாக கறி வெட்டும் பெண்ணாக ரேச்சல் படத்தில் நடித்து வரும் போஸ்டர் ரிலீஸ் ஆகி மிரட்டியது. இந்தி, தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னடம் என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ரேச்சல் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications











