அய்யோ ஹனி ரோஸை தொட்டுட்டேன்.. 32 பல்லும் தெரியுற அளவுக்கு சிரித்த ரசிகர்.. டிரெண்டாகும் வீடியோ!
திருவனந்தபுரம்: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள படங்களில் நடித்து வரும் நடிகை ஹனி ரோஸ் ரசிகர்களை சந்தித்த நிலையில், ஒரு ரசிகர் அவரது கையை தொட்டதும் சிரித்த சிரிப்பு கேமராவில் பதிவாகி தீயாக பரவி வருகிறது.
32 வயதாகும் நடிகை ஹனி ரோஸ் இளம் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து வருகிறார்.
கேரளாவில் பிறந்து வளர்ந்த ஹனி ரோஸ் 2005ல் பாய் ஃபிரெண்ட் எனும் மலையாள படத்தில் அறிமுகமானார். அதன் பின்னர் தமிழில் 2007ல் முதல் கனவே படத்தின் மூலம் அறிமுகமானார்.

ஹனி ரோஸ் அழகே தனி ரகம்: சிங்கம் புலி, மல்லுக்கட்டு, கந்தர்வன், பட்டாம்பூச்சி உள்ளிட்ட பல தமிழ் படங்களில் நடித்துள்ளார் நடிகை ஹனி ரோஸ். அவரது பேரழகை பார்த்து ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஃபேனாக மாறி உள்ளனர். உள்ளூரில் இருந்து உலக நாடுகள் வரை ஹனி ரோஸ் எங்கே சென்றாலும் அவரை ரசிகர்கள் கூட்டம் அப்படி மொய்த்துக் கொள்கின்றன. அவரது கை விரல் தீண்டி விடாதா என ஏங்கிக் கொண்டிருக்கும் ரசிகர்களில் தற்போது ஒருவருக்கு அப்படியொரு அதிர்ஷ்டம் அடித்துள்ளது.
ஹனி ரோஸை தொட்ட ரசிகர்: நடிகை ஹனி ரோஸ் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மிக்கி மவுஸ் போல கொண்டை எல்லாம் போட்டுக் கொண்டு க்யூட்டாக வந்த நிலையில், ரசிகர்களை சந்தித்து கை கொடுத்தார். அப்போது ஒரு ரசிகர் தனது கையை ஹனி ரோஸ் தொட்டு விட்டார் என்பது தெரிந்து உடனடியாக திரும்பி சந்தோஷத்தில் சிரித்ததை கேமராமேன் படம் பிடித்து விட்டார்.
செம ஹேப்பி: ரசிகரின் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த நடிகை ஹனி ரோஸ் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தி உள்ளார். இதுபோன்ற ரசிகர்களுக்காக தான் நடித்து வருகிறேன் என பதிவிட்டுள்ளார். பாலய்யாவுடன் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் அம்மாவாகவும் ஜோடியாகவும் ஹனி ரோஸ் நடித்திருந்தார். அடுத்து ரேச்சல் எனும் உமன் சென்ட்ரிக் படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











