Just In
- 10 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 11 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 11 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 11 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
பொள்ளாச்சி பாலியல் பயங்கரம்.. கோர்ட்டுக்கு வந்த இளம் பெண்.. ரகசிய வாக்குமூலம்.. சிக்கப்போவது யார்?
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 28.01.2021: இன்று இந்த ராசிக்காரர்கள் சில நிதி இழப்புகளை சந்திக்க நேரிடுமாம்….
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
போட்டோஷூட்டின் போது திடீர் விபத்து... ஆற்றில் தடுமாறி, பாறையில் விழுந்த பிரபல நடிகை!
கொச்சி: போட்டோஷூட்டின் போது பிரபல நடிகை, சேலை தடுக்கி ஆற்றுக்குள் விழுந்தார்.
பிரபல மலையாள நடிகை ஹனி ரோஸ். தமிழிலும், தெலுங்கிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
இந்த வாரம் கேபி ஆட்டம் போல.. பாலாஜியை வச்சு செய்யுது.. எகிறும் கிரேஸ்.. குஷியில் நெட்டிசன்ஸ்!
பாலமுருகன் இயக்கத்தில் விக்ராந்த் ஜோடியாக, முதல் கனவே என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்

பாய் பிரண்ட்
பிறகு, ஜீவா நடித்த சிங்கம்புலி, சலங்கை துரை இயக்கிய கதிரவன் உட்பட சில படங்களில் நடித்தார். இவரை மலையாள சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியது இயக்குனர் வினயன். அவர் இயக்கிய பாய் பிரண்ட் என்ற படம் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் பெரிதாக கவனிக்கப்படவில்லை.

திருவனந்தபுரம் லாட்ஜ்
அடுத்து அனூப் மேனன் இயக்கிய திருவனந்தபுரம் லாட்ஜ் என்ற படத்தில் நடித்தார். இதில் த்வானி நம்பியார் என்ற இவர் கேரக்டர் பேசப்பட்டது. மலையாளத்தில், மோகன்லால் மம்மூட்டி, திலீப், சுரேஷ் கோபி, ஜெயராம் உட்பட முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.

லிப் லாக் முத்தம்
இவர் பகத் பாசில், முரளி கோபி, அபிநயா ஆகியோருடன் ஒன் பை டூ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம், 2014 ஆம் ஆண்டு வெளியானது. இதில், ஹனிரோஸ் நடிகர் முரளி கோபிக்கு அழுத்தமாகக் கொடுத்த லிப் லாக் முத்தம் பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த முத்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில், சமீபத்தில் வைரலாயின.

நடிக்கவே மாட்டேன்
இதையடுத்து முத்தக் காட்சியில் இனி நடிக்கவே மாட்டேன் என்று அவர் கூறியிருந்தார். இந்நிலையில் நடிகைகள், போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். நடிகை ஹனி ரோஸும் சமீபத்தில் போட்டோஷூட் நடத்தினர்.

சேலை தடுக்கியது
கேரளாவில் ஆற்றுப் பகுதியில் இந்த போட்டோ ஷூட் நடத்தப்பட்டது. சேலை கட்டியபடி, அதிகமான பாறைகள் நிறைந்த ஆற்றுப் பகுதிக்குள் நின்று போட்டோஷூட்டில் கலந்துகொண்டார். அப்போது திடீரென சேலை தடுக்கியதால், தவறி கீழே விழுந்தார். அவரை போட்டோஷூட் குழுவினர் ஓடி சென்று தூக்கினர். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.