Honey Rose: வெறும் ஜாக்கெட் உடன் கயித்துக் கட்டிலில் ஹனி ரோஸ்.. 'ரேச்சல்' டீசர் எப்படி இருக்கு?

சென்னை: ஆனந்தி பாலா இயக்கத்தில் ஹனி ரோஸ் நடித்துள்ள 'ரேச்சல்' படத்தின் டீசர் வெளியாகி மிரட்டி வருகிறது. மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் இந்த படம் உருவாகி வரும் நிலையில், தமிழ் மொழியிலும் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் அடுத்தடுத்து ஹனி ரோஸ் நடித்து வரும் நிலையில், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏகப்பட்ட ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

Honey Rose Rachel heroine Malayala Cinema

பாலகிருஷ்ணாவின் வீர சிம்ஹா ரெட்டி படத்தில் பாலய்யாவுக்கு அம்மாவாகவும் ஜோடியாகவும் நடித்து அசத்திய நடிகை ஹனி ரோஸ் அடுத்ததாக உமன் சென்ட்ரிக் படத்தில் நடித்து வருகிறார். ரேச்சல் என டைட்டில் வைக்கப்பட்டுள்ள அந்த படத்தின் டீசர் வெளியானது.

ரேச்சல் டீசர்: அறிமுக இயக்குநர் ஆனந்தி பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ரேச்சல் படத்தின் டீசரில் ஹனி ரோஸ் கோபக்கார பெண்ணாக கொலை வெறியுடன் பேசும் வசனங்களும் ஆத்திரத்தில் சிலரை வெட்டி வீசும் காட்சிகளும் நிறைந்துள்ளன. இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் வெறித்தனமாக கறியை வெட்டுவது போல ஹனி ரோஸ் போஸ் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கயித்துக் கட்டிலில் ஹனி ரோஸ்: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளில் பல படங்களில் நடித்துள்ள ஹனி ரோஸ் சமீப காலமாக இன்ஸ்டாகிராமில் பதிவிடும் போல்டான போட்டோக்கள் மற்றும் வீடியோக்கள் காரணமாக வேறலெவலில் யங்ஸ்டர் மத்தியில் டிரெண்டாகி வருகிறார். தனது எக்ஸ்ட்ரா அழகை காட்டி இஷ்டத்துக்கு ரசிகர்களை வசீகரித்து வரும் ஹனி ரோஸ் திடீரென ரேச்சலாக கொலைவெறி பிடித்த பெண்ணாக மாறியுள்ளார். ஆனாலும், ரசிகர்களுக்கு கவர்ச்சி ட்ரீட் மிஸ் ஆகிடக் கூடாது என பாவாடை மற்றும் ஜாக்கெட் மட்டும் அணிந்துக் கொண்டு கயித்துக் கட்டிலில் படுத்துக் கொண்டிருக்கும் காட்சியை எல்லாம் டீசரில் வைத்துள்ளனர்.

Honey Rose Rachel heroine Malayala Cinema

தேடி கண்டுபிடிச்சு கொல்லணும்: அந்த ராத்திரியில இரண்டு சிவந்த கண்களை பார்த்தேன். அவனை தேடி கண்டுபிடிச்சு கொல்லணும் என டீசரில் வெறித்தனமாக ஹனி ரோஸ் வசனம் பேசும் காட்சிகளும் நிறைந்துள்ளன. முன்னணி நடிகைகள் உமன் சென்ட்ரிக் படங்களில் நடித்து தங்களுக்கான மார்க்கெட்டை உருவாக்க துடிப்பது போல ஹனி ரோஸும் அந்த பாதையை ரேச்சல் படத்தின் மூலம் தேர்வு செய்திருக்கிறார். இவருக்கு இந்த படம் எந்தளவுக்கு வெற்றியை கொடுக்கும் என்பதை வெயிட் பண்ணி பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X