twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இருந்தா, இந்தப் ‘பிசாசு’ மாதிரி ஒரு காதலி வேணும்டா... "மிரட்டும்" மிஷ்கின்!

    |

    சென்னை: வித்தியாசமான கதைக்களம், கேமரா கோணம் என தனது படைப்புகளால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் மிஷ்கின்.

    இவர் தற்போது பிசாசு என்ற தலைப்பில் பேய்ப்படம் ஒன்றை இயக்கி வருகிறார். இப்படத்தை இயக்குநர் பாலா தயாரிக்கிறார். இப்படத்தின் நாயகன் மற்றும் நாயகியாக நாகா, பிரயாஹா என்ற புதுமுகம்கள் அறிமுகமாகிறார்கள்.

    படப்பிடிப்புகள் முடிவடைந்த நிலையில், அரோல் குரேலி பின்னணி இசைக் கோர்ப்பில் பிசியாக இருக்கிறார்.

    இந்நிலையில், தனது பிசாசு படம் குறித்து ஆனந்தவிகடனுக்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார் இயக்குநர் மிஷ்கின். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

    முக்கியப்படம்...

    முக்கியப்படம்...

    என் சினிமா வாழ்க்கையில ரொம்ப முக்கியமான படம் இது. பேய், பிசாசு மீது நமக்கு காதல் வரவைக்கிற அளவுக்கு ஒரு கதை.

    பேய்க்காதல்...

    பேய்க்காதல்...

    பேய், பிசாசுன்னா பயப்பட வெச்சுப் பழக்கிட்டாங்க. இந்தப் படத்தைப் பார்க்குற ஒவ்வொருத்தருக்கும் இந்தப் பேய் மேல காதல் வரும்.

    பிசாசு மாதிரி ஒரு காதலி...

    பிசாசு மாதிரி ஒரு காதலி...

    அப்படி ஒரு அன்பும், ஈரமும் படத்தில் இருக்கு. சில பொண்ணுங்களைப் பார்த்தா, ‘இப்படி ஒரு காதலி கிடைச்சா எப்படியிருக்கும்'னு நினைப்போம்ல... அப்படி இந்தப் பிசாசு மாதிரி ஒரு காதலி வேணும்டானு நினைக்க வைக்கும் கதை.

    பிசாசுகளின் உலகம்...

    பிசாசுகளின் உலகம்...

    ஒவ்வொரு ஃபிரேமையும் ரசிச்சு ரசிச்சுப் பண்ணியிருக்கேன். பிசாசுகளின் உலகிலும் ஒரு ஆன்மாவின் ராகம் இருக்கு. அது தங்களால் நேசிக்கப்படும் நபர்களுக்காக இடைவிடாது இசைத்துக் கொண்டே இருக்கும். அதை இசைப் பின்னணியோடு பேசும் படம் இது.

    என் நண்பன் பாலா...

    என் நண்பன் பாலா...

    ஒரு தயாரிப்பாளரா இதில் எனக்குத் தோள் கொடுத்திருக்கார் என் நண்பன் பாலா. எப்பேர்ப்பட்ட கலைஞன்... என்னை வச்சு படம் தயாரிக்க ஆசைப்பட்டார்.

    ஹாங்காங் ஸ்டண்ட் மாஸ்டர்...

    ஹாங்காங் ஸ்டண்ட் மாஸ்டர்...

    ‘ஷூட்டிங் பார்க்க வாங்க'னு அடிக்கடி கூப்பிடுவேன். ஆனா, வரவே மாட்டார். கிளைமாக்ஸ் சண்டைக்காக ஹாங்காங்ல இருந்து ஸ்டண்ட் மாஸ்டரை வரவெச்சிருந்தேன். செம டெரர் டீம்.

    அடம் பிடித்தேன்....

    அடம் பிடித்தேன்....

    ‘நீங்க ஷூட்டிங் பார்க்க வரலைன்னா, கிளைமாக்ஸ் ஷூட் பண்ண மாட்டேன்'னு பாலாவிடம் சொன்னேன். அப்புறம் தான் ஸ்பாட்டுக்கு வந்தார்.

    நல்ல சினிமா...

    நல்ல சினிமா...

    முழுசா மூணு மணி நேரம் பக்கத்துல உட்கார்ந்து பார்த்துட்டு, ‘இது நல்ல சினிமாவா வரும்னு நம்பிக்கையா இருக்குடா'னு சொல்லிட்டுப் போனார்.

    பட்ஜெட்...

    பட்ஜெட்...

    படத்தை ஆரம்பிக்கும் போது, ‘உன் சம்பளம் என்ன?'னு அவரும் கேட்கலை. நானும் சொல்லலை. படத்தின் பட்ஜெட்டும் எதிர்பார்த்ததை விட ஜாஸ்தி ஆகிருச்சு.

    அட்டகாசமான அனுபவம்...

    அட்டகாசமான அனுபவம்...

    புதுமுகங்களை வெச்சுக்கிட்டு இவ்ளோ பெரிய பட்ஜெட்ல ஒரு படம் பண்ற அனுபவம் இருக்கே... அட்டகாசம். ஆனா, இவ்ளோ நாட்களில் செலவைப் பற்றி ஒரு நாளும் என்கிட்ட கேட்டது இல்லை.

    பாலா தந்த சுதந்திரம்...

    பாலா தந்த சுதந்திரம்...

    இந்தச் சுதந்திரம் தானே ஒரு கலைஞனுக்கு வேணும். அதை எனக்குக் கொடுத்திருக்கார் பாலா' என நெகிழ்ச்சியுடன் இவ்வாறு தெரிவித்துள்ளார் மிஷ்கின்.

    English summary
    Filmmaker Mysskin has collaborated with Hong Kong-based stuntman Tony Leung Siu Hung for the second time in his upcoming Tamil paranormal thriller 'Pisasu'.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X