எம்எஸ் விஸ்வநாதனுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

திருநெல்வேலியில் உள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடந்த பட்டமளிப்பு விழாவில் இந்த விருது வழங்கப்பட்டது.
தமிழக கவர்னர் ரோசைய்யா இந்தப் பட்டத்தை எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு வழங்கினார். இவ்விழாவில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன், பல்கலைக்கழக துணைவேந்தர் குமரகுரு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்திய சினிமாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்பட பல மொழிகளில் ஏராளமான படங்களுக்கு இசையமைத்தவர் எம்எஸ் விஸ்வநாதன் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments


Click it and Unblock the Notifications