மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யின் ஜன நாயகன்.. தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிச்சிட்டாங்க!
சென்னை: ஜன நாயகன் படத்திற்கு தணிக்கை வாரியம் 'ஏ' சான்றிதழை வழங்கியது குறித்து இன்னமும் கேவிஎன் நிறுவனம் எதுவுமே வாய் திறக்கவில்லையே என கேள்வியெழுப்பிய ரசிகர்களுக்கு கேவிஎன் பக்காவான ட்வீட்டை போட்டு சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.
மேலும், ஜன நாயகன் படத்தின் இணை தயாரிப்பாளரும் விஜய்யின் அட்மினான ஜெகதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜன நாயகன் 'ஏ' சான்றிதழ் வாங்கிய அறிவிப்புடன் அசத்தலான புதிய போஸ்டரையும் வெளியிட்டுள்ளார்.

தளபதி ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்த "மாண்புமிகு முதலமைச்சர் விஜய்யின் ஜன நாயகன்" போஸ்டர் வெளியானதை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
மாண்புமிகு முதலமைச்சர் டைட்டில்: விஜய்யின் ஜன நாயகன் படத்தில் மாண்புமிகு முதலமைச்சர் டைட்டில் கார்டு எல்லாம் வராது என்று கூறப்பட்ட நிலையில், தற்போது ஜெகதீஷ் வெளியிட்டுள்ள ஏ சான்றிதழ் போஸ்டரில் "Honourable Chief Minster of Tamil Nadu" என அறிவிக்கப்பட்டு ஜன நாயகன் படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். படத்திலும் பக்காவாக மாண்புமிகு முதலமைச்சர் டைட்டில் கார்டு தெறிக்கப் போகிறது என்கின்றனர்.
தம்பி இது முதலமைச்சர் படம்: தளபதி படமாக ஜனவரி 9ம் தேதி வெளியாகி இருக்க வேண்டிய விஜய்யின் ஜன நாயகன் படத்துக்கு எதிராக ஏகப்பட்ட அரசியல் நடைபெற்ற நிலையில், கடைசியாக தற்போது முதலமைச்சர் ஆன பிறகு விஜய் தனது ஜன நாயகன் படத்தை ரிலீஸ் செய்ய அனைத்து வேலைகளையும் செய்து வைத்துள்ளார். வரும் ஜூலை 24ம் தேதி ஜன நாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக போகிறது என்பது உறுதியாகி உள்ளது. கேவிஎன் தயாரிப்பு நிறுவனமும் மெளனத்தை கலைத்து ட்வீட் போட்டுள்ளது. கூடிய விரைவில் ரிலீஸ் அப்டேட்டை வெளியிடும் என ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
கருப்பு வசூலை தாண்டுமா?: இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே சூர்யாவின் கருப்பு திரைப்படம் தான் 340 கோடி வசூலை செய்து முன்னிலையில் உள்ளது. ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 திரைப்படம் இந்த ஆண்டு வெளியானால் கண்டிப்பாக கருப்பு படத்தின் வசூலை முறியடிக்கும் என்பது கன்ஃபார்ம் என்கின்றனர். ஆனால், ஜன நாயகன் படம் லீக்காகி கிட்டத்தட்ட 1.2 கோடி பேர் பார்த்துவிட்ட நிலையில், தியேட்டரில் ரசிகர்கள் படத்தை கொண்டாடுவார்களா? கருப்பு வசூலை தாண்டுமா? என்கிற கேள்விகளும் எழத்தான் செய்கிறது. ஓவர்சீஸ் வசூல், தமிழ்நாடு வசூல் உள்ளிட்டவை எந்தளவுக்கு இருக்கும் என்பது படம் வெளியான பிறகு தெரிய வரும்.


Click it and Unblock the Notifications