முருகதாஸ் படத்தில் நடித்தது தான் நான் எடுத்த மோசமான முடிவு: அப்போ சொன்ன நயன்
Recommended Video
சென்னை: தர்பார் படமாவது நயன்தாராவுக்கு திருப்தி அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய கஜினி படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நயன்தாரா. தற்போது அதே நயன்தாரா முருகதாஸ் படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.
கஜினி படத்தில் நடித்தது குறித்து நயன்தாரா தெரிவித்ததை நெட்டிசன்கள் தேடி எடுத்து படித்து அது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கஜினி
கஜினி படத்தில் நடித்தது தான் நான் என் கெரியரில் எடுத்த மோசமான முடிவு. என்னை ஒழுங்காக காட்டவில்லை. அதனால் அந்த படத்தில் நான் மோசமாக தெரிந்தேன் என்று நயன்தாரா முன்பு பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.

நயன்தாரா
என் கதாபாத்திரம் என்னிடம் தெரிவித்தது போன்று படத்தில் வரவில்லை. என்னிடம் ஒன்றை தெரிவித்துவிட்டு படத்தில் வேறு விதமாக காட்டியுள்ளனர். இருப்பினும் இது குறித்து நான் குறை கூற விரும்பவில்லை. இது எனக்கு ஒரு பாடம் என்றார் நயன்தாரா.

விவாதம்
கஜினி சம்பவத்தை அடுத்த எத்தகைய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளேன் என்று நயன்தாரா அப்பொழுது தெரிவித்தது பற்றி தற்போது பேச்சு கிளம்பியுள்ளது.

தர்பார்
தர்பார் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை நடிக்க வைக்க விரும்பினார் ஏ.ஆர். முருகதாஸ். ஆனால் ரஜினி தான் கீர்த்தி வேண்டாம், நயன்தாராவை ஒப்பந்தம் செய்யுங்கள் என்று கூறியிருக்கிறார். கஜினி போன்று இல்லாமல் தர்பார் படம் நயன்தாராவுக்கு திருப்தி அளிக்கும் அனுபவமாக இருக்கும் என்று நம்புவோமாக.


Click it and Unblock the Notifications











