லேசா லேசா... சைந்தவிக்கு வந்த ஆசைய பாருங்க... ஆனா ரசிகர்களுக்கு கொண்டாட்டம்தான்
சென்னை : பாடகி சைந்தவி சிறப்பான பல பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளார்.
கர்நாடக இசைப் பாடகியான இவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் மனைவி.
இந்நிலையில் ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளிவந்த பழைய பாடல் ஒன்றை பாடி இவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

கர்நாடக இசைப்பாடகி
பாடகி சைந்தவி சிறப்பான பாடகியாக விளங்கி வருகிறார். இசையமைப்பாளர், சினிமா பாடகி மற்றும் கர்நாடக இசை பாடகியாகவும் விளங்குகிறார். பல சிறப்பான பாடல்களை இவர் தமிழ் ரசிகர்களுக்காக தந்துள்ளார். பிரபல இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமாரின் மனைவி.

ரசிகர்கள் கொண்டாட்டம்
இவரது வாயசைப்பில் பல சிறப்பான பாடல்கள் ரசிகர்களை கொண்டாட்டத்திற்கு உள்ளாக்கியுள்ளது. தனது கணவர் இசையில் மட்டுமின்றி பல இசையமைப்பாளர்களின் இசையிலும் இவர் பாடல்களை பாடியுள்ளார். மார்கழி மாதங்களில் கர்நாடக இசை கச்சேரிகளையும் இவர் நிகழ்த்தி வருகிறார்.

புன்னகையை வரவழைக்கும்
இந்நிலையில் இவருக்கு தற்போது பழைய பாடல் ஒன்றை பாடும் ஆசை வந்துள்ளது. லேசா லேசா திரைப்படத்தில் வரும் லேசா லேசா பாடலை இவர் பாடி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மிகவும் அருமையாக மென்மையாக பாடலை பாடி பகிர்ந்துள்ளார் சைந்தவி. மேலும் அனைவருக்கும் இந்த பாடல் புன்னகையை வரவழைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
Recommended Video

மனதை வருடும் இசை
ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் அனுராதா ஸ்ரீராம் பாடியுள்ள இந்த பாடலில் த்ரிஷா மற்றும் ஷாம் போன்றவர்கள் நடித்திருப்பார்கள். மிகவும் சிறப்பான வகையில் அந்த பாடல் காட்சிகள் ரசிகர்களை கவரும் வகையில் படம்பிடிக்கப்பட்டிருக்கும் இசையும் நம்முடைய மனதை வருடும் வகையில் அமைந்திருந்தது.


Click it and Unblock the Notifications











