”உயிரோட வெளியே போவோமான்னு தெரியல” .. திகில் கிளப்பும் பிக் பாஸ் கவினின் லிப்ட் டிரைலர் ரிலீஸ்!

சென்னை: பிக் பாஸ் கவின் ரசிகர்கள் டிரெண்ட் செய்ய அட்டகாசமான வாய்ப்பு அமைந்துள்ளது.

ஆம், நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த லிப்ட் படத்தின் திகில் கிளப்பும் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

சிவகார்த்திகேயன் இந்த டிரைலரை தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கவின் படம்

கவின் படம்

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு நடிகர் கவின் நடித்த லிப்ட் படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், தற்போது லிப்ட் படத்தின் டிரைலர் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. பேய் படமாக உருவாகி உள்ள லிப்ட் படத்தின் டிரைலரின் ஒவ்வொரு நொடியும் த்ரில்லிங்கிற்கு பஞ்சமே இல்லாமல் உள்ளது.

அம்ரிதா அய்யர்

அம்ரிதா அய்யர்

இயக்குநர் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் கேப்டன் தென்றலாக நடித்த அம்ரிதா அய்யர் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். டிரைலர் முழுக்க கவினுடன் சேர்ந்து ஐடி அலுவலகத்தில் ஏதோ ஒரு மர்மத்தை கண்டு பிடிக்க ஓடுவது போல காட்சிகள் அமைந்துள்ளன.

சிவகார்த்திகேயன் ரிலீஸ்

சிவகார்த்திகேயன் ரிலீஸ்

விஜய் டிவியின் செல்லப் பிள்ளையான கவினின் நெருங்கிய நண்பரான நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் லிப்ட் படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார். வரும் அக்டோபர் 1ம் தேதி லிப்ட் திரைப்படம் ஒடிடியில் வெளியாக காத்திருக்கிறது.

ஒடிடி ரிலீஸ்

ஒடிடி ரிலீஸ்

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சமீபத்தில் நயன்தாராவின் நெற்றிக்கண், விஜய்சேதுபதியின் அனபெல் சேதுபதி உள்ளிட்ட படங்கள் வெளியான நிலையில், வரும் அக்டோபர் 1ம் தேதி கவின், அம்ரிதா நடிப்பில் உருவாகி உள்ள லிப்ட் திரைப்படம் ஒடிடி வெளியீடாக வெளியாகிறது.

Recommended Video

Rio Raj |Plan Panni Pannanum | Remya Nambeesan | Robo Shankar | Tamil Filmibeat
ஐடி லீலைகள்

ஐடி லீலைகள்

ஐடி நிறுவனங்களில் ஓவர் டைம் செய்யும் கவின் வேலையை முடித்து விட்டு லிப்டில் இறங்க செல்லும் போது நடக்கும் திகிலூட்டும் சம்பவங்கள் தான் இந்த லிப்ட் படத்தின் கதை என்பதை டிரைலரிலேயே இயக்குநர் வினீத் வரபிரசாத் ரசிகர்களுக்கு உணர்த்தி உள்ளார். ஐடி துறையில் நடக்கும் லீலைகள் பற்றிய காட்சியும் டிரைலரின் கடைசியில் வைத்து எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளார் இயக்குநர்.

தெறிக்கும் டிரெண்டிங்

தெறிக்கும் டிரெண்டிங்

#LiftTrailer என்ற ஹாஷ்டேக்கை போட்டு கவின் ஆர்மியினர் லிப்ட் டிரைலரை தெறிக்கவிட்டு வருகின்றனர். நடிகை லாஸ்லியாவின் பிரண்ட்ஷிப் வெளியான நிலையில், அடுத்ததாக கவினின் லிப்ட் படமும் வெளியாகப் போவதாகவும் கவிலியா ரசிகர்கள் இருவரையும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X