Just In
- 11 min ago
டைட்டிலை மாத்துங்க... உதயநிதி படத்துக்கு இப்படியொரு சிக்கலா?
- 12 hrs ago
சாட்சிகளுடன் பல காட்சிகளில் கதை சொல்லும் மெரீனா புரட்சி
- 13 hrs ago
நீங்களே கேப்ஷன் கொடுங்க... உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டி.. பிரபல நடிகை குசும்பு!
- 14 hrs ago
பாவம் யாரு பெத்த புள்ளையோ.. நம்மள நம்பி இவ்ளோ புரொமோஷன் பண்றாங்க.. யங் நடிகரின் மைண்ட் வாய்ஸ்
Don't Miss!
- News
கண்களில் கோபம்.. லத்தியால் தாக்கிய போலீசை எதிர்த்து நின்ற மாணவி.. என்ன ஒரு வீரம்.. வைரல் வீடியோ!
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...!
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Automobiles
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Technology
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாண்டி மாஸ்டருக்கே கதவில் பூட்டு போட்ட விஜய் டீவி
சென்னை: நமக்கெல்லாம் சாண்டி மாஸ்டராக தெரிந்தவர் சந்தோஷ் குமார் இவரை முதன்முதலில் நாம் மானாட மயிலாட நிகழ்ச்சியில் பார்த்திருப்போம் .சாண்டி மாஸ்டர் கலா மாஸ்டரின் கீழ் நடனம் பயின்று ,அவரின் படங்களில் பணியாற்றியவர்.மானாட மயிலாட நிகழ்ச்சியின் நடுவராக கலா மாஸ்டர் இருந்தார் அப்போது சதீஷ் கிருஷ்ணன் மற்றும் ஜெயஶ்ரீ ஆகியோரின் நடன இயக்குனராக செயல் பட்டார் சாண்டி, அந்த சீசனின் மானாட மயிலாட தலைப்பை அவர்களே தட்டி செல்ல சாண்டி மாஸ்டர் பிரபலம் அடைந்தார் .
சாண்டிக்கு அதற்கு பிறகு படங்களில் நடன இயக்கம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது .தமிழில் 2014ல் வெளிவந்த 'ஆ' படத்தின் மூலம் சினிமாவில் நடன இயக்குனராக கால் பதித்தார் சாண்டி மாஸ்டர் .

அதற்கு பிறகு 'விரைவில் இசை ',இவனுக்கு தண்ணில கண்டம் படங்களில் நடன இயக்கம் செய்திருந்தார்.இதில் இவனுக்கு தண்ணில கண்டம் படத்தில் இடம் பெற்ற 'லவ்வு வந்தா' பாடல் மிக பெரிய வெற்றி அடைந்து சாண்டிக்கு நல்ல பெயரை பெற்று தந்தது .
இதன் பிறகு சாகசம் ,கககபோ,ஜம்புலிங்கம் ,ஜித்தன் 2,கெத்து ,படங்களுக்கு நடன இயக்கம் செய்து வந்தார் .இதற்கிடையில் விஜய் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளுக்கும் நடன இயக்கம் செய்து வந்தார் இதையடுத்து பல மேடை நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நிறைந்த பாடல்மிக்ஸ்களிலும் நடனம் செய்து பலரையும் மகிழ்வித்து வந்தார் . பாகுபலி 2ஆம் பாகத்தின் இசை வெளியீட்டு விழா தமிழ்நாட்டில் நடக்கும் போது 'கட்டப்பா ஒய் கில்ட் பாகுபலி' என்ற நகைச்சுவை நிறைந்த நடனத்தையும் அரங்கேற்றி இருத்தார் .
அதற்கு பிறகு பா.ரஞ்சித் இயகத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளிவந்த 'காலா' படத்திற்கு நடன இயக்கம் செய்யும் வாய்ப்பு சாண்டி மாஸ்டருக்கு கிடைத்தது.
அதற்கு பிறகு சாண்டி மாஸ்டருக்கு பிக்பாஸ் சீசன் 3ல் வாய்ப்பு கிடைக்க,வாய்ப்பை சரியாக பயன்படுத்தி சீசன் 3ன் சிறந்த என்டர்டெயினர் என்ற நல்ல பெயரை பெற்று அந்த நிகழ்ச்சியின் இறுதி வரை சென்று இரண்டாம் இடத்துடன் வெளியேறினார் .
View this post on Instagram#DancingSuperStars #DSS #Mahat #Sandy #VijayTV #VijayTelevision
A post shared by Vijay Television (@vijaytelevision) on
தற்போது விஜய் தொலைக்காட்சி நடத்தும் 'டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ்' எனும் நடன நிகழ்ச்சியின் நடுவராக சாண்டி மற்றும் மகத் பங்கேற்க உள்ளார்கள் .இதற்கான விளம்பரங்கள் தற்போது விஜய் டீவியின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடபட்டிருக்கிறது ,அதில் ஒரு விளம்பரத்தில் சாண்டி 'பேட்ட' படத்தில் இடம் பெற்ற மரண மாஸ் பாடல் இயங்க நடந்து வந்து விஜய் டீவியின் கதவை திறக்கிறார் அப்போது கதவு பூட்டு போட்டு பூட்டியிருக்க எகிறி குதித்து உள்ளே செல்கிறார் சாண்டி மறுமுனையில் காரில் இருந்து வந்து அறிமுகமாகும் மகத் மற்றும் சாண்டி இருவரும் இணைந்து 'டான்சிங் சூப்பர் ஸ்டார்ஸ் ' நிகழ்ச்சிக்கு செல்வது போல அந்த விளம்பரம் அமைந்திருந்தது .