twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பீதியடைய ரெடியாகுங்க... குழந்தைகள் தினத்தில் மிரட்ட வரும் பீட்ஸா 2 வில்லா!

    By Mayura Akilan
    |

    பீட்சா 2 வில்லா' படம் வருகிற 14-ஆம் தேதி உலகம் முழுக்க ரிலீசாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    ஸ்டுடியோ கிரீன்' கே.ஈ.ஞானவேல் ராஜா வழங்க, 'திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட்' நிறுவனம் சார்பாக சி.வி.குமார் தயாரித்திருக்கும் படம், 'பீட்சா 2 வில்லா'. இந்தப் படத்தை தீபன் சக்ரவர்த்தி இயக்கியிருக்கிறார்.

    இதில் அஷோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி கதாநாயகன், கதாநாயகியாக நடித்திருக்க, சந்தோஷ் நாராயண் இசை அமைத்திருக்கிறார். இந்தப் படத்தின் எல்லா வேலைகளும் முடிந்து, படத்தின் ஆடியோவும் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

    இந்த நிலையில் படம் மீதும் பெரும் எதிர்பார்ப்பு கிளம்ப, படம் எப்போது ரிலீசாகும் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்கும் விதமாக வில்லா படம் நவம்பர் 14ம் தேதி குழந்தைகள் தினத்தில் ரிலீசாகும் என்று கூறியுள்ளனர்.

    'பீட்சா' தந்த மாறுபட்ட ட்ரீட்டை போன்று 'பீட்சா 2 வில்லா' படமும் ரசிகர்களுக்கு வித்தியாசமான ஒரு ட்ரீட் ஆக இருக்கும்' என்கிறார்கள் படக்குழுவினர்!

    English summary
    The release of Villa, popularly known as Pizza 2 has been fixed for the 14th of November. Incidentally November 14th is Childrens' day.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X