அடக்கடவுளே இன்னொரு சோகம்.. பிரபல நடிகை தூக்கிட்டுத் தற்கொலை.. சமீபத்தில் தான் குழந்தை பெற்றார்
டோக்கியோ: ரிங் பேய் படத்தில் நடித்த பிரபல ஜப்பானிய நடிகை ஞாயிறன்று தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2020 என்ன ஆண்டு என்றே தெரியவில்லை. மனித குலத்தை தாண்டி ஒட்டுமொத்த திரை உலகத்திற்கும் சோதனை ஆண்டாகவே அமைந்துள்ளது.
இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள திரைக் கலைஞர்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.

தொடரும் சோகம்
2020ம் ஆண்டு தியேட்டர்கள் மூடப்பட்டு தொழில் ரீதியாக மிகப்பெரிய இழப்பு திரைத்துறையினருக்கு நேர்ந்துள்ள நிலையில், தொடரும் உயிரிழப்புகள் மேலும் சோகத்தை அதிகரித்து வருகிறது. கொரோனா ஒரு பக்கம் உயிர்களை பலி வாங்கி வரும் நிலையில், தற்கொலை மரணங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.

மர்ம மரணம்
நோய் வாய்ப்பட்டு உயிரிழந்தால் கூட ரசிகர்கள் மனங்கள் சில நாட்களில் ஆறுதல் அடைந்துவிடும். ஆனால், தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை கடிதம் கூட இல்லை. எப்படி இறந்தார் என்பதே சந்தேகமாக இருக்கிறது என சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணம் போல ஜப்பானிலும் இந்த ஆண்டு ஏகப்பட்ட மரணங்கள் நடைபெற்று வருவது ரசிகர்கள் மற்றும் ஜப்பானிய திரையுலகினரை ஷாக் ஆக்கி உள்ளது.

40 வயது தான்
ரிங், மிஸ் ஷெர்லாக், பி வித் யூ, ஸ்ட்ராபெர்ரி நைட், பிரைட், க்ரீப்பி, மிட் நைட் ஈகிள் என ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்த ஜப்பானிய நடிகை யூகோ டக்யூச்சி (Yuko Takeuchi) இன்று தனது வீட்டு அறையில் தூக்கிட்ட நிலையில் கணவரால் கண்டெடுக்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவர் உயிர் இழந்தது உறுதி செய்யப்பட்டது. அவருக்கு வயது 40.

தற்கொலை கடிதம்
ஆனால், சுஷாந்த் சிங் ராஜ்புத்தை போலவே இவரது அறையிலும் தற்கொலை கடிதம் ஏதும் கிடைக்கவில்லை. பிரபல நடிகையின் மரணம் தொடர்பாக அவரது கணவர் டைக்கி நகாபயாஷியிடம் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தங்களுக்குள் எந்தவித சண்டையும் இல்லை என அவர் தெரிவித்துள்ளார். திரைத் துறையில் பிரச்சனையா? யாராவது மிரட்டல் விடுத்தனரா என்கிற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது
இந்த ஆண்டு ஜனவரியில் தான் நடிகை யூகோ டக்யூச்சிக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே 2005ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை இவருக்கு பிறந்துள்ளது. தற்போது இரு பிள்ளைகளையும் கணவரையும் விட்டு விட்டு இந்த உலக வாழ்க்கையில் இருந்து பிரிந்து விட்டார் ரிங் பட நடிகை.


Click it and Unblock the Notifications











