கோலிவுட் ரசிகர்களுக்கு பிடித்துள்ள 'பேய்' மவுசு

By Siva

சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே தமிழக ரசிகர்களுக்கு பேய் படம் என்றால் மிகவும் பிடித்துள்ளது.

சினிமா எடுப்பவர்கள் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் தங்களின் கவலையை எல்லாம் மறக்கும் வகையில் படம் எடுக்கவே விரும்புகிறார்கள். ரசிகர்களும் படத்தை பார்த்து கவலையை மறந்து சிரிக்க விரும்புகிறார்கள்.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக ரசிகர்களுக்கு பேய் படங்கள் மீது மவுசு ஏற்பட்டுள்ளது.

பீட்சா

பீட்சா

கடந்த 2012ம் ஆண்டு விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் நடிப்பில் வெளியான பேய் படம் பீட்சா. அந்த படம் வெற்றி பெற்றதையடுத்து பீட்சா-2- வில்லா என்ற தலைப்பில் இரண்டாம் பாகத்தை எடுத்தார்கள்.

வில்லா

வில்லா

புதுமுகம் தீபன் சக்ரவர்த்தி இயக்கத்தில் அசோக் செல்வன், சஞ்சிதா ஷெட்டி நடிப்பில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸான பீட்சா 2 வில்லா ஹிட்டானது. படத்தை எடுக்க செலவு செய்த தொகையை விட மூன்று மடங்கிற்கு அதிகமாக வசூல் கிடைத்தது.

யாமிருக்க பயமே

யாமிருக்க பயமே

கிருஷ்ணா, ஓவியா நடிப்பில் கடந்த மே மாதம் 9ம் தேதி வெளியான சிறிய பட்ஜெட் பேய் படம் யாமிருக்க பயமே. ரசிகர்கள் தியேட்டர்களில் குவிந்து பேயே வா, வா என்று அழைத்து படம் பார்த்ததால் யாமிருக்க பயமே சூப்பர் ஹிட்டானது. படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது.

சீட்டின் நுனியில்

சீட்டின் நுனியில்

ரசிகர்களுக்கு அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பில் சீட்டின் நுனியில் அமர்ந்து பேயை எதிர்பார்க்கும் படங்கள் பிடித்துள்ளது. இதனால் தயாரிப்பாளர்களும் பேய் படங்களை எடுக்கவே விரும்புகிறார்கள்.

இந்தியிலும்

இந்தியிலும்

விஜய் சேதுபதி நடித்த பீட்சா படத்தை இந்தியில் ரீமேக் செய்து கடந்த மாதம் 18ம் தேதி ரிலீஸ் செய்தனர். அட பாருங்களேன் இந்தி ரசிகர்களுக்கும் நம்ம ஆட்களை போன்று பேய் கதை பிடித்துள்ளது. விளைவு படம் ஹிட்டாகியுள்ளது.

தெலுங்கிலும்

தெலுங்கிலும்

நம்ம அஞ்சலி தெலுங்கில் நடித்துள்ள பேய் படம் கீதாஞ்சலி. படம் இந்த மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஞ்சலி பேயாக வந்து ஆந்திராவை எந்த அளவுக்கு மிரட்டுகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X