Vijayakanth in Hospital: விஜயகாந்த் உடல்நிலையில் முன்னேற்றம்.. மருத்துவமனை விளக்கம்!

சென்னை: நடிகர் மற்றும் தேமுதிக தலைவரான விஜயகாந்த் கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வருகிறார்.

கடந்த 18ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக இவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

Hospital explained about Vijayakanths health and says he is currently stable

இந்நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் விஜயகாந்த்: நடிகர் மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ரசிகர்களை கவரும்வகையில் பல அதிரடி படங்களில் நடித்தவர். தேமுதிக மற்றும் நடிகர் சங்க தலைவராக இருந்து பல செயல்பாடுகளை முன்னெடுத்தவர். கடந்த சில வருடங்களாகவே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு வரும் விஜயகாந்திற்கு சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பண்டிகை நாட்களில் இவர் ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு உற்சாகம் அளித்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி: இந்நிலையில் கடந்த 18ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. இதனால் அவரது ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டதாக வெளியான தகவலை மருத்துவமனை தரப்பு மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

உடல்நிலையில் முன்னேற்றம்: விஜயகாந்தின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் மருத்துவமனை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக காய்ச்சல் காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளது. இன்னும் சில தினங்கள் அவரது உடல்நிலை கண்காணிக்கப்படும் என்றும் விரைவில் அவர் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளது.

விரைவில் வீடு திரும்புவார்: அவர் தன்னுடைய வழக்கமான செயல்பாடுகளை செய்ய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளது. அவர் சிகிச்சைக்கு சிறப்பாக ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளது. முன்னதாக சளி மற்றும் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்ட விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக சார்பில் கூறப்பட்டிருந்தது.

ஓய்வெடுத்துவரும் விஜயகாந்த்: நடிகராக மட்டுமில்லாமல் பல்வேறு பொறுப்புகளையும் ஏற்று அனைத்து தரப்பினரையும் கவர்ந்தவர் விஜயகாந்த். அரசியலிலும் இவர் சிறப்பாக செயல்பட்ட நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக தற்போது ஓய்வெடுத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தீபாவளியையொட்டி குடும்பத்தினருடன் விஜய்காந்த் இருக்கும்படியான புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கண்கலங்க செய்தன. கம்பீரமான பிட்னசுடன் இருந்த விஜயகாந்த், தற்போது ஆளே அடையாளம் தெரியாதபடி மாறியுள்ளது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X