அசோச்செல்வனின் ஹாஸ்டல் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !
சென்னை : அசோக் செல்வன் நடிக்கும் ஹாஸ்டர் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
இப்படத்தை ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் தயாரிக்க, சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கி வருகிறார்.
இப்படத்தில் அசோச் செல்வன், பிரியா பவானி சங்கர், நாசர், சதீஷ், நாசர், முனீஷ் காந்த் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.

வெற்றி பெற்ற படம்
2015ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'அடி கப்பியாரே கூட்டமணி' ஒரு பெண் ஆண்கள் ஹாஸ்டலுக்குள் நுழைந்து விடுகிறாள். அந்த பெண்ணை 3நாட்கள் மறைக்க படாதபாடு படுகிறான் ஒரு இளைஞன்.

முழுக்க நகைச்சுவை
முழுக்க முழுக்க நகைச்சுவையில் தயாரான இந்தப் படத்தில் நாயகியாக நமிதா பிரமோத்தும், நாயகனாக தயன் ஸ்ரீனிவாசனும், நண்பர்களாக அஜு வர்க்கீஸ் மற்றும் நீரஜ் மாதவும் நடித்திருந்தனர். கண்டிப்பான ஹாஸ்டல் வார்டன் ஃபாதர் ஆல்ஃபிரட் காட்டுவிளையில் கதாபாத்திரத்தில் முகேஷ் நடித்திருந்தார்.

தமிழ் ரீ மேக்
இந்தப் படத்தை தமிழில் ரீமேக் செய்வதாக ஐந்து வருடங்களுக்கு முன்பிருந்தே கூறி வருகிறார்கள். ஆனால், இப்போது தான் நடந்திருக்கிறது. ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் இந்த ரீமேக்கை தயாரிக்க, அசோக்செல்வன், ப்ரியா பவானி சங்கர், நாசர், சதீஷ் முனீஸ்காந்த் உள்ளிட்டவர்கள் நடிக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக்
இப்படத்தை சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கியுள்ளார். 100 டிகிரி படத்திற்கு இசையதைத்த போபோ சசி படத்துக்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











