அடித்து தூள் கிளப்பும் மங்காத்தா.. படிப்படியா வசூலை அதிகரிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச்.. 3 நாள் வசூல்!
சென்னை: இயக்குனர் விக்னேஷ் கார்த்திக், மூன்று வெவ்வேறு கதைகளை ஒரே படத்தில் சேர்த்து 'ஹாட் ஸ்பாட் 2 மச்' என்ற பெயரில் கொடுத்துள்ளார். இந்த படத்தில் பிரியா பவானி சங்கர், அஸ்வின் குமார், ரக்ஷன், எம்.எஸ். பாஸ்கர், தம்பி ராமையா, பிரிகிடா, பவானி ஸ்ரீ, ஆதித்யா பாஸ்கர் மற்றும் சஞ்சனா திவாரி ஆகியோரும் நடித்துள்ளனர். ஜனவரி 23ந் தேதி வெளியான இப்படத்தின் மூன்றாம் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
வித்தியாசமான மூன்று கதைகளை கொண்டுள்ள இந்த படத்தின் முதல் கதையில், பிரபல சினிமா நடிகர்களின் வெறித்தனமான ரசிகர்களின் உறவினர்களை கடத்திச் செல்லும் எம்.எஸ். பாஸ்கர், அவர்கள் உயிருடன் இருக்க வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்
என்று மிரட்டுகிறார். அந்த நிபந்தனைகள் என்ன? உறவினர்கள் என்ன ஆனார்கள் என முதல் கதை சுவாரசியமாக செல்கிறது.

ஹாட் ஸ்பாட் 2 மச் கதை: இரண்டாவது கதையில், தம்பி ராமையாவின் மகள் சஞ்சனா திவாரி, வெளிநாட்டில் படித்து விட்டு இந்தியா வருகிறாள். நாகரீகம் என்ற பெயரில் மிகவும் மார்டனாக நடந்துக் கொள்கிறாள். இதனால், தந்தை மகளுக்கும் இடையே பிரச்சனை ஏற்படுகிறது. மகளுக்கு அப்பா எப்படி பாடம் புகட்டினார் என்று கதை நகர்கிறது. மூன்றாவது கதையில், டைம் டிராவல் மூலம் 2025ம் ஆண்டில் இருந்து 2050 ஆம் ஆண்டுக்கு செல்லும் அஸ்வின்குமார், அங்கு இருக்கும் பவானிஸ்ரீயை காதலிக்கிறார். இவர்களின் காதல் கை என்ன ஆனது என்பது தான் படத்தின் கதை.
ஹாட் ஸ்பாட் 2 மச் 3 நாள் வசூல்: மூன்று வித்தியாசமான கதைகளுடன் ஜனவரி 23ந் தேதி வெளியான இத்திரைப்படம் முதல் நாளில் 8 லட்சத்தை வசூலித்தது. இரண்டாம் நாளில் படத்தின் வசூல் இரட்டு மடங்காக அதிகரித்து ரூ 24 லட்சமாக இருந்தது. மூன்றாவது நாளான நேற்று படத்தின் வசூல் ₹28-32 லட்சமாக உள்ளது. ஆக மொத்தம் படம் வெளியான 3 நாட்களில் ரூ60.32 லட்சத்தை வசூலித்துள்ளது. அஜித் குமாரின் பிளாக்பஸ்டர் படமான மங்காத்தா ரீ ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டு வரும் வரும்,இந்த கடுமையான போட்டியிலும், 'ஹாட் ஸ்பாட் 2 மச்' படம் ஒரு நல்ல வசூலை பெற்றுள்ளது. இன்று விடுமுறை என்பதால் படத்தின் வசூல் கணிசமாக அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications











