படம் புடிக்கலைன்னா செருப்பால அடிங்க.. கதறும் ’ஹாட் ஸ்பாட்’ இயக்குநர்.. பேரரசு என்ன சொன்னார் தெரியுமா?

சென்னை: மலையாளத்தில் வெளியாகும் நல்ல படங்களுக்கு கிடைக்கும் ஓபனிங் கூட தமிழில் வெளியாகும் நல்ல படங்களுக்கு கிடைப்பதில்லை என 'ஹாட் ஸ்பாட்' படத்தின் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தி புலம்பி உள்ளார்.

யுவர்ஸ் ஷேம்ஃபுலி குறும்படத்தை இயக்கி கவனம் ஈர்த்தவர் விக்னேஷ் கார்த்திக். ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த திட்டம் இரண்டு படத்தில் ஓரினச்சேர்க்கை காதலை மையமாக வைத்து படம் இயக்கியிருப்பார். ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான அடியே படத்தையும் வித்தியாசமாக இயக்கியிருப்பார்.

Hot Spot movie director begs fans to watch his movie

இந்நிலையில், கடந்த வாரம் ஆதித்யா பாஸ்கர், கெளரி கிஷன், கலையரசன், ஜனனி, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் விக்னேஷ் கார்த்திக் இயக்கிய 'ஹாட் ஸ்பாட்' படத்திற்கு தியேட்டரில் கூட்டமே வரவில்லை எனக்கூறிய அவர் படத்தை வந்து பாருங்க புடிக்கலைன்னா என்ன செருப்பால அடிங்க என ஆவேசமாக பேசியுள்ளார்.

டிரெய்லரால் வந்த வினை: ஹாட் ஸ்பாட் படத்தின் டிரெய்லர் முழுவதும் ஆபாச வசனங்கள் நிறைந்து காணப்பட்டு இருந்தன. மேலும், பாலியல் சம்பந்தப்பட்ட காட்சிகளும், கண்டாம் இருக்கா என ஜனனி ஐயர் கேட்பதும், கணவருக்கு மனைவி தாலி கட்டுவது, சிறுமி அப்பா நான் செக்ஸியா இருக்கேனா என வசனம் பேசுவது என டிரெய்லர் பார்க்கவே கன்றாவியாக இருந்தது தான் இந்த படத்திற்கு மிகப்பெரிய மைனஸ் ஆக மாறியிருக்கலாம் என இயக்குநரே இப்போ ஃபீல் பண்ணி வருகிறார். மேலும், ஏ சான்றிதழ் வழங்கப்பட்ட படத்தை குடும்பத்துடன் சென்று பார்க்க முடியாத சூழலில் இளைஞர்களும் இந்த படத்தை கை விரித்து விட்டனர்.

பேரரசு ஆதரவு: நடிகர் விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி என இரண்டு ஹிட் படங்களை மட்டுமே கொடுத்த இயக்குநர் பேரரசு இந்த படத்துக்கு ஆதரவாக பேசியுள்ளார். படத்தை குடும்பத்துடன் வந்து பார்க்க வேண்டும் என்றும் இந்த படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுத்தது தவறு, சில காட்சிகளை கட் செய்து விட்டு யூஏ கொடுத்திருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். இந்த நல்ல படத்தை மக்கள் தியேட்டருக்கு வந்து பார்த்து ஆதரவு தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

குழந்தைகளை கெடுக்காதீங்க: இந்த படத்தின் கதையே ரியாலிட்டி ஷோக்கள் மூலம் குழந்தைங்களை கெடுக்காதீங்க என்பது தான் என்பதை அழகாக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் கூறியுள்ளார் என பேரரசு படத்தின் மொத்த கதையையும் சொல்லி ரசிகர்களை தியேட்டருக்கு வரவைக்க முயற்சி செய்துள்ளார்.

செருப்பால அடிங்க: கடைசியாக பேசிய இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் படத்தை வித்தியாச்மாகா புரமோட் செய்வதற்காக டிரெய்லரை அப்படி கட் செய்திருந்தோம். படத்தில் அட்வைஸ் மட்டுமில்லை. ஜாலியான கன்டென்டுகளும் உள்ளன. படத்தை பார்க்க ஆட்களே வருவதில்லை. மலையாள படங்களுக்கு எல்லாம் ஆதரவு தரும் தமிழ் சினிமா ரசிகர்கள் தமிழில் வெளியாகி உள்ள ஒரு நல்ல படத்தை பார்த்து ஆதரவு அளிக்க வேண்டும் என கெஞ்சியுள்ளார். மேலும், இந்த படத்தை வந்து பாருங்க, நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஒருவேளை புடிக்கலைன்னா செருப்பாலையே என்ன அடிங்க என உணர்ச்சி வசப்பட்டு பேசியுள்ளார். ஒரு படத்தை சரியாக புரமோட் செய்யவில்லை என்றால் இப்படியும் நடக்கும் என்பதற்கு 'ஹாட் ஸ்பாட்' நல்ல உதாரணமாக மாறிவிட்டது என சினிமா துறையினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X