ரசிகர்களை தியேட்டர்களுக்கு இழுக்க எப்படியெல்லாம் ஸ்டில் போட வேண்டியிருக்கு!

By Sudha

கொஞ்ச நாட்களுக்கு முன்பு வரை தமிழில் எக்குத்தப்பான காட்சிகளுடன் கூடிய படங்கள் புற்றீசல் போல அணிவகுத்து வந்தன. பலருக்கு இந்தப் படங்கள் வந்ததா, தியேட்டரில் எத்தனை நாட்கள் ஓடியது என்று கூடத் தெரியாது.

இப்போது அப்படிப்பட்ட படங்களை அதிகம் காண முடியவில்லை. இருந்தாலும் ஹாட்டான ஸ்டில்களை போட்டு படத்துக்கு ரசிகர்களை இழுக்கும் விளம்பர தந்திரத்தை இன்னும் பலர் கைவிடவில்லை என்பது வெளியாகி வரும் ஹாட்டான ஸ்டில்கள் நிரூபித்தபடிதான் உள்ளன.

படத்தின் ஸ்டில்கள் மட்டுமல்ல, பெயர்களும் கூட கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருந்தன. விவகாரம், அநாகரீகம், துரோகம் நடந்தது என்ன என்ற ரீதியில் படத்திற்குப் பெயர் வைத்து ரசிகர்களை உசுப்பேற்றி தியேட்டர்களுக்கு வரவைத்தனர்... அதுகுறித்து ஒரு சின்ன ரவுண்டப்.

இவளோடு விளையாடு

இவளோடு விளையாடு

இப்படி ஒரு படம். படத்தின் கதை என்ன, கத்திரிக்காய் என்ன என்றே தெரியவில்லை. ஆனால் படத்தில் ஹீரோயினின் சதைக்குத்தான் நிறைய வேலை வைத்துள்ளனர் என்பது ஸ்டில்லைப் பார்த்தாலே தெரிகிறது. அப்படி ஒரு கவர்ச்சிக் களேபரமாக ஸ்டில்களில் காட்சி தருகிறார் பட நாயகி.

விவகாரம்

விவகாரம்

இந்தப் படத்தின் செய்தித்தாள் விளம்பரம் பெரும் பரபரப்பாக பேசப்படவில்லை -பார்க்கப்பட்டது. காரணம், கதாநாயகியை மல்லாக்கப் படுக்க வைத்து படு கவர்ச்சிகரமான போஸ் கொடுக்க வைத்திருந்தனர்.

அநாகரீகம்

அநாகரீகம்

இப்படி ஒரு கவர்ச்சிப் படம். படத்தின் பெயர் மட்டுமல்ல, போஸ்களும் கடூ அநாகரீகமாகத்தான் இருந்தன. தெலுங்கு நடிகை வஹீதாதான் இதில் நாயகி. பாபிலோனாவுக்கும் கவர்ச்சியில் முக்கிய ரோல் கொடுத்திருந்தனர். அவரும் தனது வயதை மீறி அமர்க்களப்படுத்தியிருந்தார்.

ஸாரி டீச்சர்...

ஸாரி டீச்சர்...

இப்படி ஒரு படம். ஆசிரியர் சமுதாயத்தினரின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் ஆந்திராவில் வெளியான படம். படத்தில் ஆசிரியை ஒருவருக்கும், மாணவருக்கும் இடையிலான காமம் கலந்த காதல் குறித்த படமாம்...

இசை..

இசை..

எஸ்.ஜே.சூர்யாவின் இசை படத்திற்கும் கூட கவர்ச்சி போஸ்தான் தேவைப்பட்டது. படத்தின் நாயகியான சுலக்னா பானிக்ரகியுடன் படு நெருக்கமாக, கிறக்கமாக சூர்யா நிற்பது போன்ற படங்களைப் போட்டு சூடேற்று இசைக்கு நல்ல அறிமுகம் தேடிக் கொண்டனர்.

சிறுவாணி

சிறுவாணி

சிறுவாணி என்று ஒரு படம். அதிலும் கவர்ச்சிக்குப் பஞ்சமில்லை. கதையை விட நாயகியின் கவர்ச்சியைத்தான் பிரதானமாக நம்பி படம் எடுத்துள்ளனர் என்பது படத்தின் ஸ்டில்களைப் பார்த்தாலே தெரியும். கூடவே பாபிலோனாவும் படத்தில் இருக்கிறார்.

ஒருபக்கம் எந்திரன், விஸ்வரூபம் என்று போய்க் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா... மறுபக்கம் இப்படியும் ரூட் போட்டுக்கொண்டிருக்கிறார்கள்...

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X