நடிகர் விஜய்: என்னது சாப்பாடு சாப்பிட்டா கோட் டிக்கெட் ஃப்ரீயா.. என்னமா அலப்பறைய கொட்டுறாங்க!
மதுரை: நடிகர் விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படத்தை ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள நிலையில் பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ளார். இந்த படத்தில் அப்பா -மகன் என இரட்டை கேரக்டர்களில் விஜய் நடித்துள்ள நிலையில் சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ள இந்த படம் குறித்த அடுத்தடுத்த சுவாரசியங்களை படத்தின் கிரியேட்டில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தியும் பகிர்ந்து வருகிறார்.
படம் சர்வதேச அளவில் 5000 திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அர்ச்சனா கல்பாத்தி கூறியுள்ளார். விஜய் ரசிகர்களும் கோட் படத்தை அதன் ரிலீசை திருவிழாவாக கொண்டாட தயாராகி வருகின்றனர். படம் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதிகமான வசூலை குவிக்கும் என்பதில் மாற்று கருத்து இல்லை.

நடிகர் விஜய்: நடிகர் விஜய்க்கு சர்வதேச அளவில் மிக சிறப்பான மார்க்கெட் காணப்படுகிறது. இதையொட்டி அவரது சம்பளம் 200 கோடிகளை தாண்டியுள்ளது. கோட் படத்திற்கும் அவர் 200 கோடிகள் சம்பளம் வாங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது படத்தின் பட்ஜெட்டில் பாதி என்றும் கூறப்பட்டுள்ளது. விஜய்யின் 68வது படமாக உருவாகியுள்ள கோட் படம் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள நிலையில் இந்த படத்தில் பிரஷாந்த், பிரபுதேவா, அஜ்மல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களும் இணைந்துள்ளனர். வெள்ளிவிழா நாயகனாக கொண்டாடப்பட்ட நடிகர் மோகன் இந்த படத்தில் விஜய்க்கு வில்லனாகியுள்ளார்.
கோட் படம்: அப்பா -மகன் என இருவேறு கேரக்டர்களில் விஜய் நடித்துள்ள கோட் படத்தில் அவருக்கு ஜோடிகளாக சினேகா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோர் இணைந்துள்ளனர், இவர்கள் இணைந்துள்ள கோட் படத்தின் பாடல்கள் லிரிக் வீடியோவாக அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. யுவன் சங்கர் ராஜா இசையில் படத்தின் நான்கு பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் அடுத்ததாக ரீமிக்ஸ் பாடல் ஒன்றும் சாதாரண பாடல் ஒன்றும் என இரண்டு பாடல்கள் படத்தில் மீதமுள்ளதாக வெங்கட் பிரபு தன்னுடைய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அடுத்தடுத்து அவர் படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகிறார்.
பிரமோஷனில் வெங்கட் பிரபு: கோட் படம் குறித்த பல்வேறு சுவாரசியங்களை வெங்கட்பிரபு பகிர்ந்து வருகிறார். இதே போல படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தியும் படத்தில் ஹைப்பை உருவாக்க நாங்கள் விரும்பவில்லை என்றும் ரசிகர்களை படம் கண்டிப்பாக கவரும் என்பதில் தங்களுக்கு சந்தேகம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். படம் சர்வதேச அளவில் 5000 திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில் இந்த எண்ணிக்கை மேலும் கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் விஜய் ரசிகர்களும் இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களுக்கு காரணங்களாக அமைந்து வருகின்றனர்.
ஹோட்டலின் இலவச டிக்கெட் அறிவிப்பு: இந்நிலையில் மதுரை வில்லாபுரத்தில் இயங்கிவரும் கோச்சடை பசியாறு என்ற அசைவ ஹோட்டலில் 2999 ரூபாய்க்கு மேல் சாப்பிடும் வாடிக்கையாளர்களுக்கு கோட் படத்தின் முதல் நாள் ஷோவிற்கான இரண்டு டிக்கெட்டுகள் வழங்கப்படும் என்று ஹோட்டல் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் அந்த இடத்தில் மிகப்பெரிய பரபரப்பை விஜய்யின் கோட் படம் உருவாக்கியுள்ளது. படத்தை பார்ப்பதற்கான இலவச டிக்கெட்டுகளுக்காக ரசிகர்கள் அங்கு அலைமோதி வருவதை பார்க்க முடிகிறது. ஹோட்டலின் இந்த அறிவிப்பு சமூக வலைதளங்களிலும் விஜய் ரசிகர்களால் பகிரப்பட்டு அதிகமான கவனத்தை பெற்று வருகிறது.


Click it and Unblock the Notifications











