அடையாளம் தெரியலன்னு ஹோட்டல் உள்ள விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க... நடிகர் சசிகுமார்!
சென்னை: நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்டுள்ளார் இயக்குனர் சசிகுமார்
பகைவனுக்கு அருள்வாய், காமன் மேன், நானா, காரி உள்ளிட்ட படங்களில் தற்போது ஹீரோவாக நடித்து வருகிறார்
இந்நிலையில் பிரபல ஹோட்டல் ஒன்றில் அடையாளம் தெரியவில்லை என்று ஹோட்டல் உள்ளே விடவில்லை என சசிகுமார் சுவாரசிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

இயல்பான நடிப்பு
நட்பை மையமாக வைத்து பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்தவர் இயக்குனர் சசிகுமார். சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் நடிகராகவும் இயக்குனராகவும் அறிமுகமான சசிகுமாருக்கு அந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. 80களின் மதுரை பின்னணியில் எடுக்கப்பட்ட இந்த படம் பின் புத்தகமாக வெளியிடப்பட்டது. தனது இயல்பான நடிப்பின் மூலம் ரசிகர்களை ஈர்த்து வரும் சசிகுமார் நட்பை மையப்படுத்தி பல படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். அதில் மிக முக்கியமானது சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான நாடோடிகள் .

ஜோதிகாவுக்கு அண்ணனாக
போராளி, சுந்தரபாண்டியபுரம், குட்டி புலி,பிரம்மன், தாரை தப்பட்டை, வெற்றிவேல்,கொடிவீரன்,நாடோடிகள் 2,உடன்பிறப்பே ,எம்ஜிஆர் மகன், ராஜவம்சம் என தொடர்ந்து கிராமத்து கதைகளில் நடித்து வந்த சசிகுமார் நடிப்பில் அண்ணன் தங்கை பாசத்தை மையப்படுத்தி வெளியான திரைப்படம் உடன்பிறப்பே . சசிகுமார் அண்ணனாகவும் ஜோதிகா தங்கையாகவும் நடித்திருந்த இந்த படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது.

ஹோட்டல் உள்ள விட மாட்டேன்னு சொல்லிட்டாங்க
உடன்பிறப்பே படத்தில் சசிகுமார் மிகவும் வித்தியாசமான கெட்டப்பில் இருப்பார் வழித்து சீவிய நீண்ட தலைமுடி, நெற்றி நிறைய பொட்டு, படம் முழுக்க வேஷ்டி சட்டை என பக்கா கிராமத்து ஆளாகவே இந்த படத்தில் நடித்திருப்பார். இந்த நிலையில் ஒரு நாள் ஹோட்டல் ஒன்றில் அதே கெட்டப்பில் சென்றபொழுது சசிகுமாரை அடையாளம் தெரியாததால் ஹோட்டலுக்கு உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார்களாம்.

அடையாளம் தெரியவில்லை
இதன்பிறகு சமுத்திரக்கனிக்கு போன் செய்து வரவழைத்து போது அவரும் சசிகுமாரை பார்த்துவிட்டு எனக்கும் உன்ன அடையாளம் தெரியவில்லை எனக் கூறியுள்ளாராம். திரைத் துறையில் நீண்ட வருடங்களாக நண்பனாக பழகிக் கொண்டிருக்கும் சசிகுமார் மற்றும் சமுத்திரக்கனி உடன்பிறப்பே படத்திலும் இணைந்து நடித்திருப்பார்கள். இந்த நிலையில் ஹோட்டலில் நடந்த இந்த சம்பவம் குறித்து சசிகுமார் வெளிப்படையாக தனியார் யூட்யூப் சேனலில் பேசியுள்ளார். சசிகுமார் இப்பொழுது பகைவனுக்கு அருள்வாய், காமன்மேன்,நானா,காரி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











