நிவின் பாலி வழக்கில் புதிய ட்விஸ்ட்.. சம்பந்தப்பட்ட நாளில் கொச்சியில் இருந்தாரா?

கொச்சி: நடிகர் நிவின்பாலி தமிழ், மலையாளம் என அடுத்தடுத்த மொழி படங்களில் நடித்து வருகிறார். கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் நிவின் பாலி மீதும் இத்தகைய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. துபாயில் வைத்து நிவின்பாலி உள்ளிட்ட ஆறு பேர் தன் மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து நிவின் பாலி மீது ஊனுக்கல் காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் நிவின்பாலி உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் எந்த உண்மையும் இல்லை என்று நிவின் பாலி கூறியுள்ள நிலையில், இந்த வழக்கில் மிகப்பெரிய டுவிஸ்ட்டாக தற்போது ஆதாரம் ஒன்று வெளியாகியுள்ளது.

nivin pauly hema committee report

நடிகர் நிவின் பாலி: கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான நிலையில் அடுத்தடுத்து முன்னணி ஹீரோக்கள், பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. முன்னதாக நடிகர் ஜெயசூர்யா மீது ஜாமினில் வெளிவர முடியாத வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு நடிகர் நிவின் பாலி மீது இத்தகைய வழக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஊனுக்குள் காவல் நிலைய போலீசார் இந்த வழக்கு பதிவை செய்து நிவின் பாலியிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் சதி இருப்பதாக நிவின் பாலி குற்றம் சாட்டியுள்ளார்.

வழக்கில் புதிய ட்விஸ்ட்: இத்தகைய குற்றச்சாட்டுகள் திரையுலகை பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தன் மீதான குற்றச்சாட்டை தவறு என்று நிரூபிக்க தான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் நிவின் பாலி பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். துபாயில் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு நிவின் பாலி உள்ளிட்ட ஆறு பேர் உள்ளாக்கியதாக பெண் ஒருவர் கொடுத்த புகாரையடுத்தே நிவின் பாலி குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளார். இந்த வழக்கில் தற்போது மிகப்பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டுள்ளது.

பாலியல் துன்புறுத்தல் வழக்கு: இந்த விவகாரத்தில் சினிமாவில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக கூட்டு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக பெண் ஒருவர் கொடுத்த குற்றச்சாட்டையடுத்தே நிவின் பாலி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் குற்றம் நடந்ததாக கூறப்படும் டிசம்பர் 15ம் தேதி கொச்சியில் உள்ள பிரபல ஹோட்டலில் நிவின் பாலி இருந்ததற்கான ஹோட்டல் ஆதாரம் தற்போது வெளியாகியுள்ளது. கொச்சியில் உள்ள கிரௌன் பிளாசாவில்தான் சம்பந்தப்பட்ட நாளில் நிவின் பாலி இருந்ததாக தற்போது ஹோட்டல் பில் வெளியாகியுள்ளது. இது குறித்து முன்னதாக இயக்குனர் வினீத் ஸ்ரீனிவாசனும் நிவின் பாலிக்கு ஆதரவாக பேசியிருந்தார்.

கொச்சியில் இருந்தாரா நிவின் பாலி?: சம்பந்தப்பட்ட நாளில் தன்னுடன்தான் நிவின் பாலி இருந்ததாக வினீத் தெரிவித்திருந்தார். வருஷங்களுக்கு சேஷம் என்ற படத்தின் சூட்டிங்கிற்காக நிவின் பாலி அந்த ஹோட்டலில் தங்கியிருந்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங் எர்ணாகுளம் நியூக்ளியர் மாலில் டிசம்பர் 15ம் தேதி அதிகாலை வரை நடந்துள்ளது. இதையடுத்து பார்மா என்ற வெப் தொடர் ஒன்றிலும் அவர் நடித்துள்ளார். அந்த குறிப்பிட்ட நாளில் நிவின் பாலி தன்னுடன் இருந்ததாகவும் வினீத் கூறியிருந்த நிலையில் தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் கொச்சி ஹோட்டலில் நிவின் பாலி தங்கி இருந்ததற்கான ஆதாரம் தற்போது வெளியாகி உள்ளது.

புதிய ஆதாரம்: இந்த நாளில்தான் துபாயில் நிவின் பாலி உள்ளிட்டோர் தன்மீது பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சம்பத்ப்பட்ட பெண் கூறியுள்ளார். இந்நிலையில் தற்போது கொச்சி ஹோட்டல் ஆதாரம் நிவின் பாலி மீதான வழக்குப்பதிவில் மிகப்பெரிய ட்விஸ்டாக அமைந்துள்ளது. தன் மீதான குற்றச்சாட்டை பொய் என நிரூபிக்க தான் எந்த எல்லைக்கும் செல்வேன் என்று முன்னதாக நிவின் பாலி கூறியுள்ள நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த ஆதாரம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X