கண்களால் பலாத்காரம் செய்தேனா?: நடிகை மீது தொழில் அதிபர் வழக்கு

By Siva

டெல்லி: பாலிவுட் நடிகை இஷா குப்தா மீது அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார் டெல்லியை சேர்ந்த ஹோட்டல் உரிமையாளர் ஒருவர்.

பாலிவுட் நடிகை இஷா குப்தா டெல்லியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சாப்பிட சென்றபோது அதன் உரிமையாளர் தன்னை கண்களால் பலாத்காரம் செய்ததாக ட்விட்டரில் தெரிவித்தார்.

Hotelier files defamation case against Esha Gupta

மேலும் ஹோட்டல் உரிமையாளரின் பெயர், புகைப்படத்தை வெளியிட்டு இது தான் அவர் லட்சணம் என்று விளாசினார். ஒரு நடிகையான தனக்கே இப்படி என்றால் சாதாரண பெண்களின் நிலையை பற்றி கேட்கவா வேண்டும் என்று இஷா கூறினார்.

அவரின் ட்வீட்டுகளை பார்த்த நெட்டிசன்கள் அந்த ஹோட்டல் உரிமையாளரை கேவலமாக விமர்சித்தார்கள். இந்நிலையில் அந்த ஹோட்டல் உரிமையாளர் இஷா குப்தா மீது டெல்லி சகேத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவர் தனது மனுவில் கூறியிருப்பதாவது,

நடிகை இஷா குப்தா புகாரை அடுத்து நெருங்கிய நண்பர்களும், சக ஊழியர்களும் என்னையும், என் குடும்பத்தாரையும் தொடர்பு கொண்டு அதிருப்தி தெரிவித்தனர். இதனால் நாங்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். பொய்யான புகாரை நம்பி என் கேரக்டர் பற்றி தவறாக பேசுகிறார்கள். பொய் புகார் அளித்த நடிகை தண்டிக்கப்பட வேண்டும். மேலும் எனக்கு நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கு வரும் ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

உணவகத்தில் தன்னை வைத்த கண் வாங்காமல் பார்த்தது யார் என்று இஷா குப்தாவுக்கு முதலில் தெரியவில்லை. அவரை யாருக்காவது தெரியுமா என்று இஷா சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்ப ரசிகர்கள் தான் கண்டுபிடித்து கூறினார்கள். நான் ஒரு நடிகை என்பதால் துணிந்து புகார் அளிக்கவில்லை. ஒரு பெண்ணாக புகார் அளிக்கிறேன். நாம் பாதுகாப்பாகத் தான் உள்ளோமா?. பெண்ணாக பிறப்பதே ஒரு சாபமா என்று இஷா குப்தா கேள்வி எழுப்பியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X