கள்ளக்காதல்.. சிவகார்த்திகேயன் சிஎம்.. விஷ்ணு விஷால் காண்டாகிட்டாரா.. ஹாட்ஸ்பாட் 2 டைரக்டர் ஓபன்!

சென்னை: ஹாட்ஸ்பாட் 2மச் படத்தின் பத்திரிகையாளர்கள் காட்சி மற்றும் படம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Yours Shamefully குறும்படம் மற்றும் ஹாட்ஸ்பாட் படங்களை இயக்கிய விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஹாட்ஸ்பாட் 2மச் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 23ம் தேதி வெளியாகிறது.

சென்சார் கெடுபிடி காரணமாக ரொம்ப டூமச்சாக படத்தை கொடுக்க முடியவில்லை என்றும் எந்தளவுக்கு டூமச்சாக போக முடியுமோ அந்தளவுக்கு போயிருக்கிறோம் என விக்னேஷ் கார்த்திக் பேச ஆரம்பித்த நிலையில், அவரிடம் பத்திரிகையாளர்கள் சரமாரியான கேள்விகளை அடுக்கினர்.

Hotspot 2 Much Director Vignesh Karthik clarify why Vishnu Vishal not attending promotions

கள்ளக்காதல் விவகாரம், சிவகார்த்திகேயன் சிஎம், விஷ்ணு விஷால் ஏன் புரொமோஷனுக்கு வரல உள்ளிட்ட கேள்விகளுக்கு விக்னேஷ் கார்த்திக் பதில் அளித்துள்ளார்.

கள்ளக்காதலை ஆதரிக்கிறீங்களா?: ஹாட்ஸ்பாட் முதல் பாகத்திலும் ஏகப்பட்ட கசமுசா கதைகளை அடுக்கி வைத்திருப்பார் இயக்குநர் விக்னேஷ் கார்த்திக். கால் கேர்ள் மாதிரி கால் பாய் கதையை வைத்து அவர் இயக்கியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. முதல் படம் ஓடாத நிலையிலும், அதற்கு கிடைத்த பாராட்டுக்கள் காரணமாக 2வது பாகத்தை ஹாட்ஸ்பாட் டூமச் என்கிற டைட்டிலில் இயக்கிய நிலையில், இந்த படத்தில் கள்ளக் காதலை ஆதரிக்கிறீங்களா என பத்திரிகையாளர் கேள்வி எழுப்ப, "காதலில் எது சார் நல்ல காதல், கள்ளக் காதல்" என சினிமா டயலாக்கை போட்டு பதில் அளித்து சமாளித்துவிட்டார்.

Hotspot 2 Much Director Vignesh Karthik clarify why Vishnu Vishal not attending promotions

கரூர் சம்பவம்: கரூர் சம்பவத்தை மையமாக வைத்து சில காட்சிகள் உருவாக்கி இருக்கீங்களா? என்கிற கேள்விக்கு, இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதமே நிறைவடைந்து விட்டது. படத்தின் கதை 2023ம் ஆண்டே லாக் செய்யப்பட்டு ரெஜிஸ்டர் ஆகிவிட்டது. அதற்கும் இந்த படத்துக்கும் சம்பந்தமில்லை என்றார். மேலும், விஜய்யை கலாய்த்து காட்சிகள் வச்சிருக்கீங்க, அவருடைய தெறி ரீ ரிலீஸ் தள்ளிப்போய் தான் உங்க படத்துக்கு உதவி இருக்கு என்கிற கேள்விக்கும், இது முழுக்க முழுக்க கற்பனை தான் சூப்பர் ஸ்டார் கூட பபுள் கம் தட்டி வாயில் போடுவார், சிவாஜி படத்தை பார்க்கவில்லையா என்றார்.

விஷ்ணு விஷால் ஏன் வரல?: சிவகார்த்திகேயன் 2050ல் சிஎம் ஆகியிருப்பதாக கற்பனையாக படத்தை எடுத்து வச்சிருக்கீங்க, அதனால் தான் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் எந்த புரமோஷனுக்கும் வரவில்லையா? என பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, இந்த படம் முதலில் ஜனவரி 30ம் தேதி ரிலீஸ் என திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், விஜய் சார் படம் வெளியாகாத நிலையில், முன்கூட்டியே ரிலீஸ் பண்றோம். விஷ்ணு விஷால் சார் வேறு ஒரு படத்தில் பிசியாக உள்ளதால் அவரால் புரொமோஷனுக்கு வரமுடியவில்லை. மற்றபடி வேறு எந்த பஞ்சாய்த்தும் இல்லை என பதிலளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X