உயிருக்கு உயிராக... செம ஹாட் படங்கள்!
வேந்தர் புரொடக்ஷன்ஸ் வழங்க, கோவைத் தம்பியின் மதர்லேண்ட் பிக்சர்ஸ் தயாரிப்பில், விஜய மனோஜ்குமார் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு உயிருக்கு உயிராக என தலைப்பிடப்பட்டுள்ளது.
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஸ்டில்கள்தான் மீடியாவில் பரபரப்பாக உலா வருகின்றன.
இந்தப் படத்தில் சரண் சர்மா, சஞ்சீவ் (குளிர் 100 டிகிரி) ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

மீடியாவில் பரபரப்பாக...
சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ஸ்டில்கள்தான் மீடியாவில் பரபரப்பாக உலா வருகின்றன.
இந்தப் படத்தில் சரண் சர்மா, சஞ்சீவ் (குளிர் 100 டிகிரி) ஆகிய இருவரும் ஹீரோக்களாக நடிக்கின்றனர்.

ப்ரீத்தி தாஸ்
நந்தனா, ப்ரீத்தி தாஸ் இருவரும் நாயகிகளாக நடிக்கின்றனர். ப்ரீத்தி தாஸின் கவர்ச்சிதான் படத்தின் ஸ்டில்களில் தூக்கலாகத் தெரிகிறது. இந்த கவர்ச்சி கண்காட்சியால், படத்துக்கு பிஸினஸ் மதிப்பு கூடியுள்ளதாக சந்தோஷப்படுகிறார் இயக்குநர்.
இவர்களுடன் பிரபு, ஸ்ரீரஞ்சனி, மெரீனா சதீஷ், மைனா நாகு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இயக்குநர் விஜய மனோஜ்குமார்?
இவர் வேறு யாருமல்ல... மண்ணுக்குள் வைரம், பச்சைக் கொடி, ராஜ மரியாதை, குரு பார்வை, வானவில், ராஜ்யம், ஜெயசூர்யா உள்பட 25 படங்களுக்கும் மேல் இயக்கிய மனோஜ்குமார்தான், தன் பெயரை விஜய மனோஜ்குமார் என மாற்றிக் கொண்டு இந்தப் படத்தை இயக்குகிறார்.

பிள்ளைகள் காதலை புரிந்து கொள்ளுங்கள்
படம் குறித்து இயக்குநர் கூறுகையில், "பொதுவாக பிள்ளைகளின் படிப்பு, பழக்க வழக்கங்கள் குறித்து மட்டும்தான் பெற்றோர் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள். அதுவே காதல் என்று வந்துவிட்டால் முதல் எதிரிகளாக மாறி வரிந்து கட்டுகின்றனர். இதுதான் நமது சமூகத்தின் அடிப்படைத் தவறு. இந்த மனநிலையை மாற்றிக் கொண்டு, பிள்ளைகளின் காதல், அவர்கள் மனநிலையையும் பெற்றோர் புரிந்து கொள்ள வேண்டும், என்பதுதான் படத்தின் கதை," என்றார்.

தொழில்நுட்ப கலைஞர்கள்
இந்தப் படத்துக்கு ஆனந்த் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சாந்தகுமார் இசையமைக்கிறார். எடிட்டிங்கை முத்து கவனிக்க, ஸ்ரீதர், பிருந்தா, ராஜூ சுந்தரம் நடனம் அமைக்கின்றனர். ரங்கபாஷ்யம் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார். மக்கள் தொடர்பை ஏ ஜான் கவனிக்கிறார்.


Click it and Unblock the Notifications











