For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

#Housefull Express ரயிலில் சென்ற படக்குழு - ஒரே கல்லில் ரெண்டு மாங்கா

|

சென்னை: ஹவுஸ்ஃபுல்-4 திரைப்படத்தை விளம்பரப்படுத்துவதற்காக இப்படக்குழு, இந்திய ரயில்வே துறையுடன் கைகோர்த்துள்ளது. இதற்காக மும்பையில் இருந்து டெல்லிக்கு சிறப்பு ரயிலின் மூலம் பயணம் செய்து படத்தை விளம்பரப்படுத்த திரைப்பட குழுவினர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் படத்தின் நடிகர்கள் மற்றும் சில பத்திரிக்கை நண்பர்களுடன் டெல்லி புறப்பட்டனர். பயணத்தின் போது பல்வேறு ரயில் நிலையங்களில் படத்திற்கான விளம்பரத்தை புரமோட் செய்து வருகின்றனர்.

இந்த ரயிலையும் நடிகர்கள் நடிகையர்களை பார்க்க ரயில் நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் சமூக வலைதளங்களில் #Housefull Express எனும் ஹேஸ்டேக்கில் ரசிகர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வைரலாக்கினார்கள்.

House full 4 Film Promotion #Housefull Express

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள படம் ஹவுஸ்ஃபுல் 4. ஃபர்ஹாத் சாம்ஜி இயக்கிய நகைச்சுவை திரைப்படமான இது ஹவுஸ்ஃபுல் ஃபிரான்சிஸின் நான்காவது பகுதியாகும். அக்ஷய் குமார், ரித்தீஷ் தேஷ்முக், பாபி தியோல், கிருதி சனோன், பூஜா ஹெக்டே மற்றும் கிருதி கர்பண்டா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சாதனை இயக்குநர் ஆர்.கே.செல்வமணிக்கு 54வது பிறந்தநாள் - டிஎஸ்ஆர் சுபாஷ் வாழ்த்து

இந்திய ரயில்வே துறை வருவாய் பிரச்சினையை எதிர்கொள்ளும் விதமாக ஒரு ஆக்கபூர்வமான யோசனையை கொண்டு வந்துள்ளனர். அவர்கள் விளையாட்டு முதல் பொழுதுபோக்கு வரை பல்வேறு துறைகளை ஊக்குவிப்பதன் மூலம் ரயில்வேயின் வருவாயை அதிகரிக்க திட்டமிட்டுள்ளனர். அவர்கள் சிறப்பு ரயில்கள் தயாரித்து Promotion on wheels என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அந்த சிறப்பு ரயில்களை பல்வேறு விளம்பர நடவடிக்கைகளுக்காக முன்பதிவு செய்யலாம். இதன் விளைவாக நல்ல விளம்பர யோசனை மட்டுமல்லாமல் இந்திய ரயில்வே துறைக்கு கூடுதல் வருமானமும் கிடைக்கும். ஹவுஸ்ஃபுல் 4 Promotion on wheels திட்டத்திற்கு செல்லும் முதல் படம் ஹவுஸ்ஃபுல்-4.

மும்பையில் இருந்து டெல்லிக்கு இந்த சிறப்பு ரயிலின் மூலம் பயணம் செய்து படத்தை விளம்பரப்படுத்த திரைப்பட குழுவினர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் படத்தின் நடிகர்கள் மற்றும் சில பத்திரிக்கை நண்பர்களுடன் டெல்லி புறப்பட்டனர். பயணத்தின் போது பல்வேறு ரயில் நிலையங்களில் படத்திற்கான விளம்பரத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ரயில் நிலையத்தில் ரசிகர்கள் கூட்டம் அலை மோதியது. மேலும் சமூக வலைதளங்களில் #Housefull Express எனும் ஹேஸ்டேகில் ரசிகர்கள் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வைரலாக்கினார்கள்.

திரைப்பட தயாரிப்பாளர் சஜித் நதியாட்வாலா கூறுகையில், மத்திய அரசுக்கும், இந்திய ரயில்வேயின் இந்த புதுமையான நடவடிக்கை குறித்தும் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இது கலைத்துறை மற்றும் இந்திய ரயில்வே துறையை ஒன்றிணைத்ததாகும். இந்த புதிய புதுமையான அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவினரும் மற்றும் அனைத்து கலைத்துறையினரும் உற்சாகமாக உள்ளனர், என்று கூறினார்.

ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் தலைமை நிர்வாக அதிகாரி விஜய் சிங் கூறும்போது, Promotion on wheels என்ற புதிய திட்டத்தை ஹவுஸ்ஃபுல் 4 திரைப்படம் முதலில் துவங்கி வைத்து

தலைநகரான டெல்லிக்கு சென்று விளம்பரப்படுத்துவதில் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு தீபாவளி விருந்தாக அக்டோபர் 25 ஆம் தேதி வெளியாகிறது.

படத்தின் பாடல்களை சோஹைல் சென், ஃபர்ஹாத் சாம்ஜி, சந்தீப் ஷிரோத்கர் மற்றும் பஞ்சாபி ஹிட் ஸ்குவாட் ஆகியோரும் பின்னணி இசையை ஜூலியஸ் பாக்கியமும் கையாண்டுள்ளனர். ஒளிப்பதிவு மற்றும் எடிட்டிங்கை முறையே சுதீப் சாட்டர்ஜி மற்றும் ராமேஸ்வர் எஸ்.பகத் கையாண்டுள்ளனர்.

நகைச்சுவை திரைப்படமான ஹவுஸ்ஃபுல் 4 அக்டோபர் 25ஆம் தேதியன்று திரையில் வெளியாக உள்ளது.

Read more about: akshaykumar
English summary
The film crew has joined hands with the Indian Railways to promote the movie Housefull-4. The film crew has booked a special train from Mumbai to Delhi for this. Also, the film's cast and some press friends journey for Delhi. The film is being advertised at various train stations during the trip.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more