கன்னுக்குட்டி.. கன்னுக்குட்டி.. அனிதா பேச்சுக்கு ஹவுஸ்மேட்ஸ் ரியாக்ஷன் அல்டிமேட்.. மரண கலாய்!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நீண்ட நேரம் விடாமல் அழுது அழுது பேசிய அனிதாவை நெட்டிசன்கள் வச்சு செய்துள்ளனர்.

Recommended Video

Anitha Husband Prabha emotional message | Bigg Boss 4 Tamil

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் நீங்கா நினைவுகள் என்ற டாஸ்க்கை கொடுக்கப்பட்டது.

இதில் ஹவுஸ்மேட்ஸ் யாரை ரொம்ப மிஸ் பண்றாங்க என்பதையும் அவருடைய நினைவுகளையும் பகீர வேண்டும்.

நெளிந்த ஹவுஸ்மேட்ஸ்

நெளிந்த ஹவுஸ்மேட்ஸ்

ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ரத்தின சுறுக்கமாய் பேசி முடிக்க அனிதா மட்டும் மணி கணக்காய் கண்ணீரும் கம்பளியுமாய் பேசிக் கொண்டிருந்தார். நீண்ட நேரம் அனிதாவின் பேச்சை கேட்க முடியால் நெளிந்தபடியே இருந்தனர் ஹவுஸ்மேட்ஸ்.

சொல்ல முடியாமல்

சொல்ல முடியாமல்

ஷிவானி, பாலாஜி, ரம்யா பாண்டியன், ஆஜித் ஆகியோர் இருந்த இடத்திலேயே செமயாய் கலாய்த்துக் கொண்டிருந்தனர். ஜித்தன் ரமேஷ், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் என சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் அமர்ந்திருந்தனர்.

ஒரு வழியாய் முடித்தார்

ஒரு வழியாய் முடித்தார்

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாத சம்யுக்தா. அனிதா ரொம்ப லாங்கா போகுதும்மா.. என்று கூற அப்படி சீக்கிரம் முடிக்கிறேன் என்று கூறி ஒரு வழியாய் முடித்தார். இதனை பார்த்த நெட்டிசன்கள் அவரை மரண கலாய் கலாய்த்துள்ளனர்.

தூங்க போலாமானு

அனிதா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், யார மிஸ் பண்றாங்கனு கேட்டா என்னவெல்லாமோ உளருது அனிதா. எல்லா கன்டெஸ்ட்டன்ட்ஸும் விழுந்து விழுந்து சிரிக்கிறாங்க எல்லோரும் தூங்க போலாமானு கேட்குறாங்க செம காமெடி என்கிறார்.

ஓட்டுபோடாமல்

நேற்றைய எபிசோடில் அனிதா கண்ணீர் விட்டு பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், சீக்கிரமே அனித்தா அவரது கணவரிடம் சென்றடைய அனைவரும் உதவி ( வோட்போடாமல் வெளியேற்றுங்க ) பண்ணுங்க என கூறியுள்ளார்.

பிரச்சனை வர போகுது

அனிதா பேசும் போது சம்யுக்தா குறுக்கிட்டதை பார்த்த இந்த நெட்டிசன், அவள பேசவிடலைனு பிரச்சனைய உண்டாக்க போறா சேச்சி கூட அனிதா என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

நாள் ஃபுல்லா கூட பேசும்

விட்டா இன்னைக்கு ஃபுல்லா கூட பேசும் போல இந்த அனிதா என குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

காதில் ரத்தம் வரும் வரை

காதில் ரத்தம் வரும் வரை

அனிதா பேசியதை கிண்டலடித்து, பேசினேன் பேசினேன் மத்த ஹவுஸ்மேட்ஸ் காதில் இருந்து ரத்தம் வரும் வரை பேசினேன் என குறிப்பிட்டுள்ளார்.

திரும்ப திரும்ப சொல்லிட்டு

கேப்பே விடாம பேசுறத பார்த்தா ஒரே டயலாக்தான் ஊருக்குள்ள திரும்ப திரும்ப சொல்லிட்டு இருக்காங்களோ அனிதா என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

எனக்கே பாக்கணும் போல

யாருய்யா அந்த பிரபாகரன்.. எனக்கே அவன பாக்கணும் போல இருக்கு.. என அனிதா தனது கணவர் குறித்து பேசியதை குறிப்பிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

இரிட்டேட்டிங் கேரக்டர்

மற்றொரு நெட்டிசனான இவர் சான்ஸ் கிடைத்தால் போதும்னு பேசினதையே பேசிட்டு இருந்தா இப்படி தான் நோஸ்கட் வரும் இரிடேட்டிங் கேரக்டர் அனிதா சம்பத் என பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

குலுங்கி குலுங்கி

நேற்றைய எபிசோடில் அனிதா பேசுவதை பார்த்த இந்த நெட்டிசன், அனிதா கதைய கேட்டு குலுங்கி குலுங்கி சிரிக்குறங்கப்பா என கிண்டலடித்துள்ளார்.

வச்சு செஞ்சிவிட்டாய்ங்க..

நேற்றைய எபிசோடில் அனிதா பேசியதை பார்த்த இந்த நெட்டிசன், புருசன பத்தி பத்து நிமிசம் பேசுன்னா இந்த அனிதா சம்பத் மகாபாரதம் மாதிரி 250 எபிசோட் ஓட்டபாத்தா அப்டித்தான்.. வச்சு செஞ்சிவிட்டாய்ங்களா சரி கண்ணத்தொட கண்ணத்தொட.. என கேலி செய்துள்ளார் இந்த நெட்டிசன்.

ஹாஸ்பிட்டல்ல சேர்க்கணும்

விஜய் டிவி, கன்னுக்குட்டிய எப்படியாவது பத்திரமா வீட்ல சேத்துருங்க சாமி.. இல்லாட்டி ஆடியன்ஸ் பல பேர ஹாஸ்பிட்டல்ல சேர்க்க வேண் வரும்.. என கிண்டலடித்துள்ளார் இந்த நெட்டிசன்.

ரியக்ஷன் அல்டிமேட்

"கன்னுகுட்டி கன்னுகுட்டி".. உன் ஸ்பீச்சுக்கு ஹவுஸ் மேட்ஸ் கொடுத்த ரியாக்ஷன் அல்டிமேட் எண்டெர்டெய்ன்மென்ட்.. எடிட் பண்ணதே இப்படினா, அப்போ ஃபுல்லா கேட்ட ஹவுஸ்மேட்ஸ் நிலைமை. சாம் மேல தப்பே இல்ல, உண்மையிலே நன்றிதான் சொல்லணும் என்கிறார் இந்த நெட்டிசன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X