ஒரே குறும்படம்.. ஒட்டுமொத்தமாய் திரும்பிய ஹவுஸ்மேட்ஸ்.. அசிங்கப்பட்ட சம்யுக்தா!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் சம்யுக்தாவுக்கு போட்ட குறும்படத்தை பார்த்த ஹவுஸ்மேட்ஸ் அந்தர் பல்டி அடித்து விட்டனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுக்க பாலாஜி, சம்யுக்தா, ரம்யா உள்ளிட்ட சில ஹவுஸ்மேட்ஸ் ஆரியை டார்கெட் செய்தனர்.

ஒரு பக்கம் ஆரிக்கும் பாலாஜிக்கும் சண்டையை பார்த்து சில ஹவுஸ்மேட்ஸ் குளிர்காய்ந்தனர்.

சம்யுக்தாவுக்கும் ஆரிக்கும்

சம்யுக்தாவுக்கும் ஆரிக்கும்

சிலர் இதுதான் சான்ஸ் என ஆரியை ரவுண்டு கட்டினர். அந்த வகையில் சக போட்டியாளரான சம்யுக்தா ரொம்பவே அதிகமாக பேசினார். சம்யுக்தாவுக்கும் ஆரிக்கும் கடந்த சில வாரங்களுக்கு முன்பே புகைய தொடங்கிவிட்டது.

இருவருக்கும் பனிப்போர்

இருவருக்கும் பனிப்போர்

குறிப்பாக சம்யுக்தா பாலாவால் கேப்டன் ஆனதால் கடுப்பானார் ஆரி. தகுதியில்லாமல் கேப்டன் ஆகிவிட்டார் என குற்றம்சாட்டினார். இதனை தொடர்ந்து இருவருக்குள்ளும் பனிப்போர் நிலவி வந்தது.

வளர்ப்பு சரியில்லை

வளர்ப்பு சரியில்லை

ஆரி ஏதாவது பேசினாலே அதில் குறை கண்டுபிடித்து வருகிறார் சம்யுக்தா. அதோடு ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்றும் அவ்வப்போது கூறி வருகிறார். கோர்ட் டாஸ்க்கின் போது ஆரியின் வளர்ப்பு சரியில்லை என்று கூறினார் சம்யுக்தா.

தாய்மையை கேவலப்படுத்தி

தாய்மையை கேவலப்படுத்தி

அதனை தொடர்ந்து கடந்த வாரம் நடைபெற்ற கால் செண்டர் டாஸ்க்கிலும் சனம் ஷெட்டியுடன் போனில் பேசிய சம்யுக்தா ஆரியின் பெயரை குறிப்பபிடாமல் வளர்ப்பு சரியில்லை என்றார். அது குறித்து ஆரி விளக்கம் கேட்ட போது, நீங்கள் ஏன் தாய்மை கேவலப்படுத்தி பேசுனீங்க என்றார்.

கமல் போட்ட குறும்படம்

கமல் போட்ட குறும்படம்

இந்நிலையில் இன்றைய எபிசோடில் தாய்மை குறித்து பாலாஜி கேவலமாக பேசினாரா என்று கேள்வி எழுப்பிய கமல் அது தொடர்பாக குறும்படம் போட்டு சம்யுக்தாவை வெளுத்தார். அதில் ஆரி அவரது தாய்மையை கேவலப்படுத்துவது போல் எதுவும் பேசவில்லை என்பது என தெரிந்தது.

குறும்படம் குறித்து கேள்வி

குறும்படம் குறித்து கேள்வி

மேலும் சம்யுக்தா, ஆரியை அவன் இவன் என பேசியதும், அவருக்கு அர்ச்சனா முட்டுக்கொடுத்ததும் தெரிந்தது. இதனை தொடர்ந்து சக ஹவுஸ்மேட்ஸிடம் குறும்படம் குறித்து கேள்வி எழுப்பினார் கமல்.

Recommended Video

என்னோட INSPIRATION DHANUSH SIR தான் | ACTOR NAVIN KUMAR CHAT PART-01 | FILMIBEAT TAMIL
அர்ச்சனா கருத்து

அர்ச்சனா கருத்து

அப்போது அதுகுறித்து பேசிய அர்ச்சனா, தாய் என்று குறிப்பிட்டு பேசியதால் அந்த வார்த்தை சம்யுக்தாவுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது. எனக்கு அவர் என்ன சொன்னார் என்பது இப்போதுதான் புரிந்தது. மெச்சூரிட்டி இருக்குன்னு தான் சொல்லியிருக்கார் என்று கூறினார்.

ரியோ கருத்து

ரியோ கருத்து

தொடர்ந்து ரியோவிடம் கருத்து கேட்டார் கமல். அப்போது சார் நான் இந்த விஷயத்துக்குள்ளேயே வரவில்லை என்று மழுப்பினார். இருந்த போதும் குறும்படத்தை பார்த்து கம்பேர்தான் பண்ணியிருக்கார், சம்யுக்தாவின் தாய்மையை கேவலமாக பேசவில்லை என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X