Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
60 நாளில் என்ன செஞ்சீங்க.. அசிங்கப்படுத்திய பிக்பாஸ்.. அரட்டையடித்து சிரிப்பாய் சிரித்த ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: 60 நாளில் என்ன செய்தீர்கள் என்று கேட்டு ஹவுஸ்மேட்ஸ்களை பிக்பாஸ் அசிங்கப்படுத்தியதை ஹவுஸ்மேட்ஸ் சொல்லி சொல்லி அரட்டையடித்து சிரித்தனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி நேற்று 60வது நாளை எட்டியது. இதனை தொடர்ந்து ஹவுஸ்மேட்ஸ்கள் ஒவ்வொருவராய் அழைத்த பிக்பாஸ் 60 நாளில் இந்த வீட்டில் என்ன செய்தீர்கள் என்பதை ரசிகர்களுக்கு சொல்லுங்கள் என்றார்.
இதற்காக பிரத்யோக அரங்கம் அமைக்கப்பட்டு பிக்பாஸுடன் பேசும்படியாக இருந்தது. இதில் நேற்று ரமேஷ், ஆஜித், சோம், கேபி, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன் ஆகியோர் பங்கேற்றனர்.
கேப்டன் டாஸ்க்கில் போங்காட்டம்.. குறும்படம் போட்டு பாலாஜியை கிழித்து தொங்கவிட்ட கமல்!
வேக்கப் பாடலுக்கு டான்ஸ்
அவர்களை வார்த்தைக்கு வார்த்தை மொக்கை செய்தார் பிக்பாஸ். எல்லோரும் ஒரே மாதிரியாக முன்வைத்த வேக்கப் பாடலுக்கு டான்ஸ் ஆடுவது, டாஸ்க்கை சரியாக செய்வது போன்ற விஷயங்களை கூறினர்.
அது இல்ல.. இது வேற..
அதனை கேட்ட பிக்பாஸ் இதெல்லாம் ரூல்ஸில் உள்ளது. இதையெல்லாம் செய்துதான் ஆக வேண்டும். வேறு என்ன செய்தீர்கள் உங்கள் ரசிகர்களுக்கு சொல்லுங்கள் என்றார். ஒவ்வொரு போட்டியாளரும் பேசும் போது குறுக்கிட்ட பிக்பாஸ் அது இல்ல, இது வேற, இதைப்பத்தி பேசுங்க.. என அசிங்கப்படுத்தினார்.
அசிங்கப்பட்டதை பேசி
மேலும் உள்ளே நடந்ததை மற்ற ஹவுஸ் மேட்ஸிடமும் சொல்ல வேண்டாம் என்றும் கூறியிருந்தார் பிக்பாஸ். ஆனால் உள்ளே சென்று வந்த போட்டியாளர்கள் தாங்கள் அசிங்கப்பட்டதை தங்களுக்குள் பேசி அரட்டையடித்தனர்.
Recommended Video
சொல்லி சொல்லி சிரித்து
இந்த வேலையை நேற்றே நிஷா, ரமேஷ், ஆஜித், ரம்யா சோம் ஆகியோர் தொடங்கினர். இந்நிலையில் அதன் தொடர்ச்சியாக இன்றைய எபிசோடிலும் அந்த அரட்டையே தொடர்ந்தது. கார்டன் ஏரியா, லிவிங் ஏரியா என கிடைத்த இடத்தில் எல்லாம் சொல்லி சொல்லி சிரித்தனர்.
உச்சக்கட்டமாக
பிக்பாஸ் தங்களை எப்படியெல்லாம் அசிங்கப்படுத்தினார் என்பதை ஒவ்வொருவராய் பகிர்ந்துகொண்டனர். பிக்பாஸ் டேமேஜ் பண்ணியதற்கு கொஞ்சமும் வருத்தப்படாமல் விழுந்து விழுந்து சிரித்தனர். சோம், கேபி மற்றும் ரமேஷ் உச்சக்கட்டமாக தாங்கள் அசிங்கப்பட்டதை வைத்து சிரித்து மகிழ்ந்தனர்.