Just In
- 6 hrs ago
அடுத்த மாதம் ரிலீசாகிறது சுனைனாவின் ’ட்ரிப்’.. சன் டிவி யூடியூபில் வெளியான மிரட்டல் டிரைலர்!
- 6 hrs ago
சக போட்டியாளர்கள் மேல் விழுந்த தரம் தாழ்ந்த விமர்சனங்கள்.. முதல் பேட்டியில் ஆரி அர்ஜுனன் நெத்தியடி!
- 7 hrs ago
அது ஹீரோயின்கள் ஏரியாவாச்சே.. மாலத்தீவுக்கு குடும்பத்துடன் விசிட் அடித்த பிரபல ஹீரோ!
- 7 hrs ago
கடைசி நேரத்துல பள்ளிகளை திறக்கக் கூடாது.. ராட்சசி பட இயக்குநர் கெளதம்ராஜின் ஸ்பெஷல் பேட்டி!
Don't Miss!
- News
தமிழக சட்டசபை தேர்தல்.. இழுபறியில் கூட்டணி... ஜன.30-ல் தேமுதிக ஆலோசனை கூட்டம்
- Automobiles
மலேசிய நாட்டிற்கான யமஹாவின் 2021 ஒய்இசட்எஃப்-ஆர்25!! நம்மூர் ஆர்15 போல இருக்கு!
- Finance
அம்சமான சேமிப்புக்கு அசத்தல் திட்டங்கள்.. SBI Vs post office RD.. எது சிறந்தது.. எவ்வளவு வட்டி?
- Sports
தொடர்ந்து பலமாகும் ராஜஸ்தான் ராயல்ஸ்... இவர்வேற ஜாய்ன் ஆகியிருக்காரே... சூப்பரப்பு!
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பொறாமையில் தான் எல்லோரையும் குறை சொல்கிறார்.. கன்னாபின்னாவென ஆரியை வச்சு செய்த ஹவுஸ்மேட்ஸ்!
சென்னை: டிக்கெட் டூ ஃபினாலே 8வது டாஸ்க்கில் ஆரியை ஒரு பக்கம் கட்டியணைத்து பாராட்டினாலும் மறுப்பக்கம் ஃபுல் பேக்கேஜ்ஜை வைத்துக்கொண்டு அவரை குத்தி தள்ளினர் ஹவுஸ்மேட்ஸ்.
பிக்பாஸ் வீட்டில் ஃபினாலே வாரத்திற்குள் செல்லும் டிக்கெட்டுக்கான 8வது டாஸ்க் கொடுக்கப்பட்டது.

அதன்படி ஆக்டிவிட்டி ஏரியாவில் வைக்கப்பட்ட வாக்கியத் துண்டில் இருக்கும் வாக்கியம் யாருக்கு பொருந்தும் என்பதை காரணத்துடன் சொல்ல வேண்டும்.

வாக்கிய துண்டுகள்
இதற்காக ஆக்டிவிட்டி ஏரியாவில் உள்ள ஹவுஸ்மேட்ஸின் கட் அவுட்டுகள் அமைக்கப்பட்டிருந்தன. அதில் ஒவ்வொருவராய் சென்று தங்களுக்கு வரும் வாக்கியத் துண்டுகளை எடுத்து படித்து அது யாருக்கு பொருந்தும் என கூறுகின்றனர்.

கூடிப்பிரியேல்
இதில் ஒரு வாக்கியத்துக்கு யாருடைய பெயர் அதிகம் பொருந்துதோ அவர் தனது கட்அவுட்டில் அந்த வாக்கியத்தை பொருத்திக் கொள்ள வேண்டும். அதன்படி கூடிப்பிரியேல் என்ற வாக்கியத்தை எடுத்த ஆரி, தான் சோமுடன் கூடிப்பிரிந்த கதையை நகைச்சுவையாக கூறினார்.

கட்டிப்பிடித்த ரியோ
அதனை மொத்த ஹவுஸ்மேட்ஸும் என்ஜாய் செய்தனர். ரியோ, முதல் முறையாக ஆரி புரோ ஒரு கமெண்ட்ட எடுத்து ஃபன்னா ஜாலியா சொல்லி முடிச்சுட்டு வந்திருக்கிறார் என அவரை கட்டியணைத்தார். இதனை பார்த்த ரசிகர்கள் முதல் முறையாக ஆரியை ஹவுமேட்ஸ் பாராட்டியுள்ளனர் என கூறி வருகின்றனர்.

தேசத்தோடு ஒட்டி வாழ்
ஒரு பக்கம் ஆரியை பாராட்டினாலும் மறுப்பக்கம் அவரை வச்சு செய்தனர். காலத்தை அழியேல் என்ற வாக்கியத்தை கொடுத்து அட்வைஸ் செய்வதை நிறுத்திக் கொள்ளுங்கள் என்றனர். மேலும் எல்லோருடனும் கருத்து வேறுபாடு கொண்டுள்ளார் என்று கூறி தேசத்தோடு ஒட்டி வாழ் என்ற வாக்கியத்தை கொடுத்தனர்.

ஆரிக்கு பொறாமை
மேலும் எல்லோரையும் கண்டு பொறாமைப்படுகிறார் என்றும் அவரை வச்சு குத்தினர். ஆரி, ரம்யாவை பொறாமை படுவதாக கூறினார். அதனை தொடர்ந்து வந்த அனைத்து ஹவுஸ்மேட்ஸும் ஆரி பொறாமையில் தான் மற்றவர்கள் மீது குறை சொல்கிறார். மற்றவர்களை தகுதியில்லை என்று பொறாமையில்தான் சொல்கிறார் என்றனர்.

வெளியே போனா தெரியும்
அதனை பெற்றுக் கொண்ட நான் பொறாமையில் விளையாடுகிறேனா என்பது நீங்கள் வெளியே போன பிறகு உங்களுக்கு தெரியும். நான் பொறாமையுடன் விளையாடியிருந்தால் என் விளையாட்டே வேற மாதிரி இருக்கும். அதற்கு என்னால் உதாரணம் சொல்ல முடியும் ஆனால் என் நேரத்தை வீணாக்கவில்லை என்று கூறினார்.

ஷிவானிக்கு வந்த வாக்கியம்
இதனை தொடர்ந்து காலம் அழியேல் அதாவது காலத்தை வீணாக்காதே என்ற இந்த வாக்கியம் ஷிவானிக்கு ஒட்டப்பட்டது துன்பத்திற்கு இடம் கொடேல் என்ற வாக்கியம் ரியோவின் கட் அவுட்டில் ஒட்டப்பட்டது. கடைசியில் இந்த டாஸ்க் நாளை தொடரும் என்று அறிவித்தார் பிக்பாஸ்.