முதல் முறையாக ஆரியை பாராட்டித்தள்ளும் ஹவுஸ்மேட்ஸ்.. கட்டியணைத்த ரியோ.. கலக்கல் புரமோ!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அனைத்து ஹவுஸ்மேட்டுகளுக்கும் ஆகாத ஒரு ஆள் என்றால் அது ஆரிதான்.

மக்கள் மத்தியில் ஆரிக்கு என்னதான் ஆதரவு இருந்தாலும் ஹவுஸ்மேட்ஸ், அவர் மற்றவர்களை பற்றி குறை சொல்லியே விளையாடுகிறார் என அவர் மீது வன்மத்துடனே உள்ளனர்.

டேமேஜ் செய்து..

டேமேஜ் செய்து..

அதோடு ஆரிக்கு மக்கள் மத்தியில் இருக்கும் மதிப்பையும் ஆதரவையும் அறிந்த ஹவுஸ்மேட்ஸ், அவருடைய பெயரை டேமேஜ் செய்வதாக நினைத்து தங்களை தாங்களே டேமேஜ் செய்து வருகின்றனர்..

மொத்த பேரும் சேர்ந்து..

மொத்த பேரும் சேர்ந்து..

அதன் வெளிப்பாடாக நேற்று நடைபெற்ற குறை சொல்லும் டாஸ்க்கில் மொத்த பேரும் சேர்ந்து ஆரியை குறி வைத்து தாக்கினர். சோம், ரியோ, பாலாஜி, ரம்யா என அத்தனை பேரும் ஆரியை எவ்வளவு டேமேஜ் செய்ய முடியுமோ அவ்வளவு டேமேஜ் செய்தனர்.

பெரும் ஆச்சரியம்

பெரும் ஆச்சரியம்

இதனால் ஆரியை தவறாக காட்ட முயற்சிப்பதாக விஜய் டிவியையும் ஹவுஸ்மேட்டுகளையும் சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விளாசி வந்தனர். இந்நிலையில் இன்று வெளியாகியுள்ள இரண்டாவது புரமோ பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆரிக்கு புகழாரம்

ஆரிக்கு புகழாரம்

காரணம் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் ஆரியை புகழ்ந்து தள்ளுகின்றனர். அதாவது டிக்கெட் டூ ஃபினாலேவுக்கான 8வது டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வாக்கியத் துண்டில் இருக்கும் வாக்கியம் யாருக்கு பொருந்தும் என்பதை காரணத்துடன் சொல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

வாக்கியத் துண்டுகள்

வாக்கியத் துண்டுகள்


இதற்காக ஆக்டிவிட்டி ஏரியாவில் உள்ள ஹவுஸ்மேட்ஸின் உருவ பொம்மைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் ஒவ்வொருவராய் சென்று தங்களுக்கு வரும் வாக்கியத் துண்டுகளை எடுத்து உருவ பொம்மைகளில் பொருத்துகின்றனர்.

ஆரி காமெடி பேச்சு..

ஆரி காமெடி பேச்சு..

அந்த வகையில் தனக்கான வாக்கியத் துண்டை எடுக்கும் ஆரி, இதற்கு விளக்கம் சொல்லி நேரத்தை வீணாக்க வேண்டாம் என்று நினைக்கிறேன். ஏன்னா காலத்தை அழியேல் என்று சொல்லி கொடுத்திருக்கிறீர்கள் என்று கூறுகிறார்.

கட்டியணைத்த ரியோ

கட்டியணைத்த ரியோ

இதனைக் கேட்ட ரியோவும் ரம்யாவும் கைகளை தட்டி வாவ் என்ன ஒரு இம்ப்ரூவ்மென்ட் என்று பாராட்டுகின்றனர். தொடர்ந்து பேசும் ரியோ, முதல் முறையாக ஆரி புரோ ஒரு கமெண்ட்ட எடுத்து ஃபன்னா ஜாலியா சொல்லி முடிச்சுட்டு வந்திருக்கிறார் என அவரை கட்டியணைக்கிறார்.

என்னடா இது அதிசயம்..

என்னடா இது அதிசயம்..

இதனை பார்த்த ரம்யா, எல்லாமே நல்லாருந்தது என்று கூறுகிறார். சோம் அருகில் சென்று ஆரியை பாராட்டுகிறார். இப்படியாக உள்ளது இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ. இதனை பார்த்த ரசிகர்கள் என்னடா இது அதிசயம் என வாயை பிளந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X