ஆரி கப்பு வாங்கும் போது அன்பு கேங் ரியாக்ஷன பாத்தீங்களா? தெறிக்கவிடும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிக்பாஸ் ட்ரோஃபியை ஆரி வாங்கும் போது அன்பு கேங்கினர் ரியாக்ஷன் குறித்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் 105 நாட்கள் ஒளிப்பரப்பாகி வந்த பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக் கிழமை நிறைவடைந்தது.

இதில் மக்களின் எதிர்பார்ப்பு படியே ஆரி டைட்டில் வின்னராகி கோப்பையை தட்டிச் சென்றார். அவருக்கு பிக்பாஸ் ட்ரோஃபியும் 50 லட்சம் ரூபாய் பணப்பரிசும் வழங்கப்பட்டது.

தாங்களே வென்றது போல்.

தாங்களே வென்றது போல்.

பிக்பாஸ் டைட்டிலை ஆரி வென்றதை ரசிகர்கள் உற்சாகமாய் கொண்டாடினர். தாங்களே வென்றதை போல் உணர்வதாக சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆரியை பாராட்டி டிவிட்டுகளையும் பதிவிட்டு வருகின்றனர்.

அன்பு கேங்கின் ரியாக்ஷன்

அன்பு கேங்கின் ரியாக்ஷன்

இந்நிலையில் ஆரி அர்ஜூனன் கப் வாங்கும்போது மேடையில் அமர்ந்திருந்த சக போட்டியாளர்களின் ரியாக்ஷன் வைரலாகி வருகிறது. குறிப்பாக அன்பு கேங்கின் ரியாக்ஷனை பார்த்த ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர்.

கைகளை கட்டிக் கொண்டு

கைகளை கட்டிக் கொண்டு

அனிதாவும் சனம் ஷெட்டியும் கைகளை தட்டி ஆரவாரம் செய்கின்றனர். எழுந்து நின்றும் தாங்களே பிக்பாஸ் கப்பை வாங்கியது போன்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஆனால் அன்பு கேங்கை சேர்ந்தவர்கள் சொல்லி வைத்தது போல் கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர்.

வினோதமானவர்கள்

வினோதமானவர்கள்

ஆஜித், ரம்யா பாண்டியன், ஷிவானி, ரியோ, ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா, அர்ச்சனா என அனைவருமே கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தனர். இதனை பார்த்த ரசிகர்கள் இந்த பிக்பாஸ் சீசன் போட்டியாளர்கள் வினோதமானவர்கள் என்று விளாசி வருகின்றனர்.

எந்தளவுக்கு வெறுப்பு

எந்தளவுக்கு வெறுப்பு

எந்த சீசனிலும் சக போட்டியாளர்கள் இப்படி இருந்ததில்லை. ஒருவர் வெற்றி பெற்றால் மற்றவர்கள் அதனை கொண்டாடுவார்கள் என்று கூறி வருகின்றனர். இதிலேயே தெரிகிறது ஹவுஸ்மேட்ஸ் ஆரியை எந்தளவுக்கு வெறுக்கிறார்கள் என்று கூறி வருகின்றனர்.

நேர்மை வென்றது

நேர்மை வென்றது

இதேபோல் சனம் ஷெட்டியும் அனிதாவும் ஆரியின் வெற்றியை கொண்டாடு போட்டோவையும் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். மேலும் அந்த போட்டோவுக்கு ஃபிரண்ட்ஷிப் பத்தி இந்த போட்டோ பேசுகிறது. இறுதியில் நேர்மை வென்றது என குறிப்பிட்டு வருகின்றனர்.

மகிழ்ச்சி இல்லை

மகிழ்ச்சி இல்லை

மேலும் அர்ச்சனாவும் நிஷாவும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளும் போட்டோவையும் ஷேர் செய்து பங்கம் செய்துள்ளனர். மொத்தத்தில் ஆரி வெற்றி பெற்றதில் அன்பு கேங்குக்கு கொஞ்சமும் மகிழ்ச்சி இல்லை என்பது தெளிவாக தெரிந்து விட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X