குறும்படமே தேவையில்ல.. பச்சையாய் குரூப்பிஸத்தை நிரூபித்த ஹவுஸ்மேட்ஸ்.. அதகளப்படுத்திய அங்கிள்!

சென்னை: பிக்பாஸ் வீட்டின் இந்த வார கேப்டன் யார் என்பது குறித்த டாஸ்க்கில் பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் உள்ளது என்பதை ஹவுஸ்மேட்ஸ் பச்சையாய் நிரூபித்துள்ளனர்.

Recommended Video

Bigg Boss 4 Tamil | Day 11 | 15th October Episode - Filmibeat Tamil

பிக்பாஸ் வீட்டில் முதல் வார கேப்டனாக ரம்யா பாண்டியனை பிக்பாஸே நேரடியாக தேர்வு செய்தார்.

அவரை தொடர்ந்து கடந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டின் கேப்டனாக சுரேஷ் சக்கரவர்த்தி இருந்தார்.

சிறந்த பர்ஃபாமன்ஸ்

சிறந்த பர்ஃபாமன்ஸ்

கமல் முன்னிலையில் அதற்கான வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில் வரும் வாரத்திற்கான கேப்டனை தேர்வு செய்யும் பணியை கொடுத்தார் பிக்பாஸ். அதற்காக ஆட்டம் கொண்டாட்டம் டாஸ்க்கில் சிறந்த பர்ஃபாமன்ஸ் கொடுத்த இரண்டு பேரை தேர்வு செய்ய சொன்னார்.

யார் ஈடுபாட்டுடன்..

யார் ஈடுபாட்டுடன்..

அதன்படி கேப்ரில்லாவும் வேல்முருகனும் சிறப்பாக நடனமாடியதாக தேர்வு செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் ரொம்ப ஈடுபாட்டுடன் செயல்பட்டவர் யார் என்று கேட்டார் பிக்பாஸ்.

மூன்று பேர்

மூன்று பேர்

அதற்கு ஒருவரை தேர்வு செய்யுமாறு கூறினார் பிக்பாஸ். அதன்படி ரியோவை தேர்வு செய்தனர் ஹவுஸ்மேட்ஸ். தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட மூன்று பேரும் கேப்டன் பதவிக்கான போட்டியாளர்கள் என்று கூறினார் பிக்பாஸ்.

இரண்டு குரூப் உள்ளது

இரண்டு குரூப் உள்ளது

மேலும் வேல்முருகனுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் யார்? ரியோவுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் யார் என கேட்டார் பிக்பாஸ். அதற்கு ஹவுஸ்மேட்ஸ்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து இருவருக்கும் ஆதரவு தெரிவித்தனர்.

ஒரே ஆளாய்

ஒரே ஆளாய்

கேபிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் யார்? என்றார் பிக்பாஸ். அதற்கு ஒரே ஆளாய் எழுந்து நின்றார் சுரேஷ் சக்கரவர்த்தி. பின்னர் டாஸ்க்கை அறிவித்த பிக்பாஸ், தாங்கள் ஆதரவு தெரிவித்த போட்டியாளர்களை ஹவுஸ்மேட்ஸ் தூக்கி சுமக்க வேண்டும் என்றார்.

முதுகில் சுமந்த சுரேஷ்

முதுகில் சுமந்த சுரேஷ்

இதனை கேட்டதுமே, சுரேஷ் சக்கரவர்த்தியால் தன்னை சுமக்க முடியாது எனக்கூறி போட்டியிலிருந்து விலகுவதாக கூறினார் கேப்ரில்லா. ஆனால் எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, நான் தூக்குகிறேன். நீ வா, என விடாப்பிடியாக அழைத்து சென்று முதுகில் கேபியை சுமந்தார் சுரேஷ் சக்கரவர்த்தி.

கதறிய கேபி

கதறிய கேபி

ஆனால் தன்னால் சுரேஷ் சக்கரவர்த்தி கஷ்டப்படுவதாக நினைத்த கேப்ரில்லா, சுமார் 9 நிமிடத்தில் சுரேஷின் பேச்சையும் மீறி சாரி தாத்தா என்று கூறி இறங்கிவிட்டார். பின்னர் சாரி தாத்தா , உங்களுக்கு வலிச்சுருக்கும் என்று கூறி அவரை கட்டிப்பிடித்தப்படியே கதறி அழுதார்.

சமாதானப்படுத்திய சுரேஷ்

சமாதானப்படுத்திய சுரேஷ்

அந்தக் காட்சிகள் ரொம்பவே எமோஷனலாக இருந்தது. ஆனால் இது விளையாட்டும்மா, இதில் அதையெல்லாம் பார்க்கக்கூடாது. எனக்கு வலித்தால் வலிக்கிறது என்று சொல்லியிருப்பேன். ஆனால் வலிக்கவில்லை என அவ்வளவு பேசி அவரை சமாதானப்படுத்தினார் சுரேஷ் சக்கரவர்த்தி.

மறுத்த ரியோ

மறுத்த ரியோ

ஏற்கனவே சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் வீட்டில் குரூப்பிஸம் இருப்பதாக எவிக்ஷன் ஃபிரி டாஸ்க்கின் போது குற்றம்சாட்டினார். ஆனால் குரூப்பிஸமே இல்லை என்று அடித்துப் பேசிய ரியோ, குரூப்பிஸம் இருப்பதாக கூறிய சுரேஷ் சக்கரவர்த்தியை கட்டம் கட்டி வச்சு செய்தார்.

சுரேஷின் முயற்சி

சுரேஷின் முயற்சி

இந்நிலையில் கேப்டன் டாஸ்க்கில் பச்சையாக அப்பட்டமாக தெரிந்தது பிக்பாஸ் வீட்டில் உள்ள குரூப்பிஸம். தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மட்டுமே ஹவுஸ்மேட்ஸ்கள் ஆதரவு தெரிவித்தனர். ஆனால் தன்னை பால் போடும் டாஸ்க்கின் போது வெளியேற்றிய கேப்ரில்லாவை கொஞ்சமும் யோசிக்காமல் கேப்டனாக்க தீவிரமாக முயற்சி செய்தார் சுரேஷ்.

குறும்படமே தேவையில்லை

குறும்படமே தேவையில்லை

இதனை பார்த்த நெட்டிசன்கள், குறும்படமே தேவையில்லை நீங்களே நிரூபித்துவிட்டீகள், பிக்பாஸ் வீட்டில் குருப்பிஸம் உள்ளது என்பதை என்று விளாசியுள்ளனர். இன்னும் சில நெட்டிசன்கள் சுரேஷ் சக்கரவர்த்தியின் நடவடிக்கையை பார்த்து ஒரே நாளில் உச்சத்துக்கு சென்று விட்டீர்கள் என புகழ்ந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X