கொளுத்திப்போட்ட கமல்.. முதுகில் குத்திய அனிதா.. கொதித்துப் போன ரியோ.. பரபரக்கும் புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் புரமோவில் ரியோ நல்லவரை போல் நடிப்பதாக கூறி ஹவுஸ்மேட்ஸ் அவருக்கு முகமூடி அணிவித்தது முதல் புரமோவில் தெரியவந்துள்ளது.
Recommended Video
வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடிகர் கமல்ஹாசன் ஹவுஸ்மேட்ஸ்களை சந்தித்து வருகிறார்.
சனிக்கிழமையான நேற்று ஹவுஸ் மேட்ஸ்களை சந்தித்த கமல், கடந்த வாரம் முழுக்க நடந்த சம்பவங்கள் குறித்து விவாதித்தார்.

தட்டி வைத்த கமல்
அப்போது சுரேஷ் சக்கரவர்த்தியிடம் சண்டைப்போட்ட ரியோவை வெளுத்து வாங்கினார். அதனை தொடர்ந்து வேல்முருகனையும் பட்டும் படாமல் தட்டி வைத்தார். தொடர்ந்து இந்த வாரம் எவிக்ஷனில் இருந்து தப்பித்தவர்கள் யார் என்றும் கூறினார் கமல்.

முதல் புரமோ
அதன்படி ரம்யா, ஆஜித், ஷிவானி ஆகிய மூன்று பேர் எவிக்ஷனில் இருந்து தப்பித்துவிட்டனர். இந்நிலையில் இன்று யார் எவிக்ட் ஆகப் போகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் கமல். இதனிடையே இன்றைய எபிசோடுக்கான முதல் புரமோ வெளியாகியுள்ளது.

ரியோ நடிக்கிறார்
அதில் மரணமாக கொளுத்திப் போட்டுள்ளார் கமல்ஹாசன். அதாவது பிக்பாஸ் வீட்டில் யாரெல்லாம் மாஸ்க் போட்டிருப்பதாக நினைக்கிறீர்கள் என கேட்கிறார். அதற்கு பெரும்பாலான ஹவுஸ்மேட்ஸ்கள் ரியோ தான் மாஸ்க் போட்டுக் கொண்டு நல்லவர் போன்று நடிப்பதாக கூறியுள்ளனர்-

குதுகில் குத்திய அனிதா
குறிப்பாக அவருடன் கூட்டு சேர்ந்து கொண்டு எப்போதும் அவருடனே சுற்றிக் கொண்டிருக்கும் அனிதா சம்பத், ரியோதான் நல்லவரை போல் நடிக்க மாஸ்க் போட்டிருப்பதாக கூறி அவருக்கு மாஸ்க்கை கொடுக்கிறார். இதேபோல் கேப்ரியல்லா உட்பட பல ஹவுஸ்மேட்ஸ் ரியோ நடிப்பதாக கூறி மாஸ்க் கொடுத்துள்ளனர்.

இது நியாயமா?
அவரை தொடர்ந்து நடிகர் ஆரிக்கும் ஹவுஸ்மேட்ஸ் மாஸ்க் கொடுக்கின்றனர். சுரேஷ், சம்யுக்தா உள்ளிட்டோர் அவருக்கு மாஸ்க் கொடுக்கின்றனர். ரியோவும் ஆரியும்தான் அதிக மாஸ்க்குகளை பெற்றவர்களாக தெரிகிறது. தொடர்ந்து பேசும் கமல் உங்களுக்கு மாஸ்க் கொடுத்தை நியாமாக நினைக்கிறீர்களா என கேட்கிறார்.

விரைவில் பூகம்பம்
அதற்கு எடுத்த எடுப்பிலேயே கொஞ்சம் கூட நியாயமே இல்லை என்கிறார் ரியோ. இதனால் தனக்கு மாஸ்க் போட்ட ஹவுஸ்மேட்ஸ் மீது ரியோ கொல வெறியில் இருப்பதாக தெரிகிறது. அவர்களை பழிவாங்க நிச்சயம் ஏதாவது செய்வார், பிக்பாஸ் வீட்டில் விரைவில் பூகம்பம் வெடிக்கும் என கூறி வருகின்றனர் ரசிகர்கள்.


Click it and Unblock the Notifications











