For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    யாருக்கு என்ன கேம் பிளான்.. புட்டு புட்டு வைத்த ஹவுஸ்மேட்ஸ்.. பாலா பிளானை தோலுரித்த கேபி!

    |

    சென்னை: பிக்பாஸ் வீட்டில் யாருக்கு என்ன கேம் பிளான் உள்ளது என்பதை சக ஹவுஸ்மேட்ஸ் புட்டு புட்டு வைத்தனர்.

    பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் இரண்டு வாரங்களில் ஃபைனல்ஸ் நடைபெற உள்ளது.

    மோகன் ராஜா இயக்கும் லூசிஃபர் ரீமேக்கில் நயன்தாரா.. வில்லனுக்கு மனைவியாக நடிக்கிறாரா?

    இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று ஹவுஸ்மேட்ஸை சந்தித்த கமல் முதலில் போட்டியாளர்களை பிரச்சாரம் செய்யுமாறு கூறினார்.

    சக போட்டியாளரின் போட்டோ

    சக போட்டியாளரின் போட்டோ

    அதனை தொடர்ந்து சக ஹவுஸ்போட்டியாளர்களின் கேம் பிளான் என்னவாக இருக்கும் என்றும் கேட்டார். இதற்காக ஒவ்வொரு போட்டியாளருக்கும் சக போட்டியாளரின் போட்டோ கொடுக்கப்பட்டது.

    ரியோவுக்கு சோம் போட்டோ

    ரியோவுக்கு சோம் போட்டோ

    அதன்படி ரியோவுக்கு சோமின் போட்டோ வந்தது. இதனை தொடர்ந்து சோமின் கேம் பிளான் குறித்து பேசினார் ரியோ. அதன்படி சோம் எல்லோருடன் நல்ல ஃபிரண்ட்ஷிப்பை மெயிண்டைன் பண்ணுவதாகவும், குட் வைப்ஸை கொடுப்பதாகவும் கூறினார். யாருடன் சண்டை வந்தாலும் உடனே அதை மறந்து ஃபிரண்ட்ஷிப்பை மெயிண்டைன் பண்ணுவதாகவும் கூறினார்.

    ஸ்பெஷல் பிளான் இல்லை

    ஸ்பெஷல் பிளான் இல்லை

    அடுத்தப்படியாக சோம்க்கு ஆஜித்தின் போட்டோ வந்தது. இதனை தொடர்ந்து அவர் குறித்து பேசிய சோம், ஆஜித்துக்கு கேம் பிளான் இருக்கான்னே தெரியல என்றார். மேலும் ஆஜித்தும் என்னை மாதிரிதான் இருக்கிறார். டாஸ்க்குகளில் எல்லாம் வெற்றி பெற வேண்டும் என்ற பிளான் இருக்கிறது. ஆனால் ஸ்பெஷல் ஸ்ட்ரேட்டஜி இருப்பதாக தெரியவில்லை என்றார்.

    ஆரிக்கு ரம்யாவின் போட்டோ

    ஆரிக்கு ரம்யாவின் போட்டோ

    அடுத்து வந்த ஆரிக்கு ரம்யாவின் படம் வந்தது. ரம்யா குறித்து பேசிய ஆரி, அவர் ஒரு எண்டெர்டெயினர், நிறைய காமெடி பண்ணியிருக்கிறார். எதையும் மிஸ் பண்ணக்கூடாது என்ற மனப்பான்மையுடன் இருக்கிறார். ஆனால் அவரது கேம் அணுகு முறையில உள்ள யுக்தியை குறையாக பார்க்கிறேன். அவர் வெளிப்படையா கருத்துக்களை முன் வைப்பதில்லை என்று காலர் டாஸ்க்கின் போது நடந்த சம்பவங்களை கூறினார்.

    சேஃப்பா விளையாடும் பாலா

    சேஃப்பா விளையாடும் பாலா

    அடுத்து வந்த கேபிக்கு பாலாஜியின் போட்டோ வந்தது. அப்போது பேசிய கேபி, பாலா கெட்டவரா இருந்து நல்லாவராக மாறி விளையாடலாம் என்ற யுக்தியை ஃபாலோ பண்ணுவதாக கூறினார். மேலும் உடன் இருக்குறவங்களை நாமினேட் பண்ணாம சேஃப்பா விளையாடுவதாகவும் கூறினார்.

    English summary
    House mates shares co contestants game plan in front of Kamal. Gabi talks about Balaji Game plan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X