50வது நாளில் பிக்பாஸ்.. ஹவுஸ்மேட்ஸ் பங்களிப்பு என்ன? ஒரு நிமிடத்திற்குள் சொல்ல சொன்ன கமல்!
சென்னை: பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்கள் ஆன நிலையில் ஹவுஸ்மேட்ஸ் தங்களின் பங்களிப்பு குறித்து பகிர்ந்து கொண்டனர்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இன்று பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்று 50வது நாளை எட்டியுள்ளது.
இதனை முன்னிட்டு அட்டகாசமான உடையில் இன்று தோன்றினார் கமல். நிகழ்ச்சிக்கு முன்னதாக பிக்பாஸ் ரசிகர்களையும், சுற்றுச்சூழல் ஆர்வலர் பத்மரியாவையும் வீடியோ மூலம் சந்தித்து பேசினார்.

பிஸ்கட் கதை
பின்னார் பேசிய நிஷா தன்னுடைய 50 நாள் பங்களிப்பாக எல்லோரையும் எண்டெர்டெயின் பண்ணியிருக்கேன். சமையல் உட்பட எல்லா வேலையும் செய்திருக்கேன் என்றார். மேலும் சுகி சிவம் கூறிய பிஸ்கட் கதையை கூறிய நிஷா அதன் எல்லாருக்கும் கொடுத்து சாப்பிடனும் என்பதை செய்கிறேன் என்றார்.

டான்ஸ் ஆடினேன்
கேபி பேசிய போது ஆடியன்ஸ்க்கு என்னை பற்றி தெரிய எல்லா டாஸ்க்குகளிலும் பங்கேற்று என்னுடைய பெஸ்ட் கொடுக்றேன். நான் டான்ஸ் ஆடுவது மக்களுக்கு தெரியப்படுத்தியிருக்கேன். இதை எனக்கான வாய்ப்பாக பயன்படுத்தி வருகிறேன் என்றார்.

நேர்மையாக விளையாடுவேன்
தொடந்து பேசிய ஆரி பிக்பாஸ் நிகழ்ச்சியில் 100 நாள் தங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதில் ஒவ்வோரு நிமிடத்தையும் நேர்மையாக விளையாடுகிறேன். மக்களுக்கு தேவையான விஷயங்களை சொல்லுவேன் என மிகச்சுறுக்கமாக முடித்துக் கொண்ட ஆரி கமலின் பாராட்டை பெற்றார்.

மரியாதை கூடியுள்ளது
அவரை தொடர்ந்து பேசிய சுச்சி, நிறைய பாடல்கள் பாடியிருக்கேன், எழுதிருயிக்கேன். இங்கு நல்ல ஃபிரண்ட்ஷிப் கிடைத்திருக்கு. எனக்கு குத்தப்பட்ட முத்திரைகளை வைத்து பல பாடல்களை எழுதியிருக்கேன். டாஸ்க்குகளை செய்திருக்கேன். இங்குள்ள கேமரா மேன்களுக்கு புரூஸ் என பெயர் வைத்து என் உணர்வுகளை பகிர்ந்துள்ளேன். என்மேல் எனக்கு மரியாதை கூடியுள்ளது என்றார்.


Click it and Unblock the Notifications











